தமிழகம்

மனித உரிமை ஆணையத்தின் தலைவராக எஸ். பாஸ்கரன் நியமனம்..!

தமிழ்நாடு, இந்தியா, உலகம், சினிமா, விளையாட்டு, செய்திகளை உடனுக்குடன் தெரிந்துகொள்ள Tamil Thisai டெலிகிராம் சேனலுடன் எப்போதும் இணைந்திருங்கள்.
Share

தமிழ்நாடு மாநில மனித உரிமை ஆணையத்தின் தலைவராக ஓய்வு பெற்ற உயர் நீதிமன்ற நீதிபதி எஸ். பாஸ்கரன் நியமனம்.

தமிழ்நாடு மாநில மனித உரிமை ஆணையத்தின் தலைவராக இருந்த மீனாகுமாரியின் பதவிக்காலம் டிசம்பர் 25- ஆம் தேதியுடன் முடிவடைந்த நிலையில் தற்போது அதன் தலைவராக எஸ்.பாஸ்கரனை நியமிக்க தமிழக ஆளுநர் பன்வாரிலால் புரோஹித் ஒப்புதல் அளித்தார். அதையடுத்து, மாநில மனித உரிமை ஆணையத் தலைவராக பாஸ்கரனை நியமித்துத் தலைமைச் செயலாளர் சண்முகம் அறிவித்துள்ளார். 

மாநில மனித உரிமை ஆணையத்தின் தலைவராக பாஸ்கரன் மூன்று ஆண்டுகள்வரை பதவிவகிப்பார் எனத் தமிழக அரசு தெரிவித்துள்ளது.

ALSO READ  கைதிகளுக்கு கை,கால் முறிவு, டி.எஸ்.பி.,க்கள் விசாரணை...

பாஸ்கரன்  சென்னை உயர்நீதிமன்றத்தின் நீதிபதியாக 2016- ஆம் ஆண்டு முதல் 2018- ஆம் ஆண்டு வரை பணியாற்றியுள்ளார் என்பது குறிப்பிடத்தக்கது. 


Share
தமிழ்நாடு, இந்தியா, உலகம், சினிமா, விளையாட்டு, செய்திகளை உடனுக்குடன் தெரிந்துகொள்ள Tamil Thisai டெலிகிராம் சேனலுடன் எப்போதும் இணைந்திருங்கள்.

Related posts

தீபாவளி பண்டிகைக்காக சொந்த ஊருக்கு சென்றுள்ளவர்கள் மூன்று நாட்கள் கழித்து சென்னைக்கு திரும்ப முதலமைச்சர் மு க ஸ்டாலின் வேண்டுகோள்

News Editor

ஆட்சியர் அலுவலகம் முன்பு கொட்டிக்கிடந்த மதுபாட்டில்கள்; போட்டிபோட்டு பொறுக்கிய மதுபிரியர்கள் !

News Editor

ரேஷனில் இரண்டாவது தவணை வழங்கல்….

Shobika