தமிழகம்

சூர்யா வெளியே நடமாட முடியாது; சூர்யா படம் ஓடினால் தியேட்டர்களை கொளுத்துவோம்!

தமிழ்நாடு, இந்தியா, உலகம், சினிமா, விளையாட்டு, செய்திகளை உடனுக்குடன் தெரிந்துகொள்ள Tamil Thisai டெலிகிராம் சேனலுடன் எப்போதும் இணைந்திருங்கள்.
Share

வன்னியர் சமுதாய மக்களிடம் மன்னிப்பு கேட்காவிட்டால் சூர்யா தமிழகத்தில் நடமாட முடியாது என்றும், சூர்யா படம் ஓடினால் தியேட்டர்களை கொளுத்துவோம் என்றும் காடுவெட்டி குரு மருமகன் மிரட்டல் விடுத்துள்ளார்.

சூர்யா படம் ஓடினால் தியேட்டர்களை கொளுத்துவோம்”!

இதுகுறித்து காடுவெட்டி மனோஜ் அளித்துள்ள பேட்டியில்,

சூர்யா வெளியே நடமாட முடியாது; தியேட்டர்களை கொளுத்துவோம்! காடுவெட்டி குரு  மருமகன் ஆவேசம்… – www.patrikai.com

ஜெய்பீம் மக்களுக்கு தேவையான திரைப்படம் தான். இருளர் சமுதாயம் எந்த அளவிற்கு ஒடுக்கப்பட்டுள்ளனர் என்பதை எடுத்து காட்டியுள்ளனர்.

ஆனால், உண்மை கதை என்றுசொல்லிவிட்டு சம்மந்தமே இல்லாத வில்லனை வன்னியர் சமூகத்தைச் சார்ந்தவராக காட்டியுள்ளனர். ராஜாக்கண்ணு என்ற பழங்குடியினரை கொலை செய்த காவல் சார்பு ஆய்வாளரின் பெயர் அந்தோணிசாமி என்பது பலரும் அறிந்த உண்மை.

ஆனால், அந்த பாத்திரத்திற்கு குருமூர்த்தி என்று பெயர் சூட்டி, வன்னியர் சங்கத்தின் மறைந்த தலைவர் ஜெ.குருவை நினைவுபடுத்தும் வகையில் குரு என்று அழைப்பது ஆகியவையும், இந்த அநீதிகளுக்கு வலு சேர்க்கும் வகையில் அமைக்கப்பட்டுள்ள சில காட்சிகளும் தான் தமிழ்நாட்டில் வாழும் வன்னியர் மக்களை கொந்தளிக்கச் செய்துள்ளன.

ALSO READ  பழங்குடி மாணவர்களின் கல்வி நலனுக்காக நடிகர் சூர்யா ரூ.1 கோடி நிதியுதவி

அதேபோல், வில்லனாக காட்டியுள்ள போலீசாரின் வீட்டிற்குள் வன்னியர் சங்க காலெண்டரை தொங்கவிட்டுள்ளனர்.

சூர்யா படம் ஓடினால் தியேட்டர்களை கொளுத்துவோம்”!

அந்த காவல் உதவி ஆய்வாளருக்கு குரு என பெயர் வைத்ததற்கு பதிலாக, தீரன் சின்னமலை என்ன பெயர் வைப்பாரா சூர்யா. அப்படி அவர் வைத்திருந்தால் அவரை வீடு புகுந்து அடித்து நாசம் செய்திருப்பார்கள்.

ALSO READ  கொரோனா முன்னெச்சரிக்கையை தவிர்க்கும் சென்னை மக்கள் - ட்விட்டரில் அஸ்வின்‌ வேதனை

இதற்காக நடிகர் சூர்யா ஒட்டுமொத்த வன்னியர் சமுதாய மக்களிடம் பகிரங்கமாக மன்னிப்பு கேட்க வேண்டும். அப்படி இல்லையென்றால் சூர்யாவின் எந்த படமும் இனி தியேட்டர்களில் ஓட்ட முடியாது. மீறி திரையிட்டால் தியேட்டர்களை கொளுத்துவோம் என ஆவேசமாக மனோஜ் பேசியிருப்பது பரபரப்பை ஏற்படுத்தியுள்ளது.


Share
தமிழ்நாடு, இந்தியா, உலகம், சினிமா, விளையாட்டு, செய்திகளை உடனுக்குடன் தெரிந்துகொள்ள Tamil Thisai டெலிகிராம் சேனலுடன் எப்போதும் இணைந்திருங்கள்.

Related posts

23 மாதங்களுக்கு பிறகு தமிழ்நாடு- கேரளா போக்குவரத்து துவங்கியது

naveen santhakumar

சட்டக்கல்லூரி மாணவர்கள் கொரோனா விழிப்புணர்வு பேரணி !

News Editor

அரசு பேருந்துகளின் ஆயுட்காலம் அதிகரிப்பு – அரசாணை வெளியீடு!

naveen santhakumar