தமிழகம்

கமல் டிஸ்சார்ஜ்: கமல் வெளியிட்டுள்ள நன்றி அறிக்கை

தமிழ்நாடு, இந்தியா, உலகம், சினிமா, விளையாட்டு, செய்திகளை உடனுக்குடன் தெரிந்துகொள்ள Tamil Thisai டெலிகிராம் சேனலுடன் எப்போதும் இணைந்திருங்கள்.
Share

சென்னை:-

கொரோனா தொற்றிலிருந்து இருந்த மீண்ட நடிகரும், மக்கள் நீதி மய்யம் கட்சியின் தலைவருமான கமல்ஹாசன் மருத்துவமனையிலிருந்து டிஸ்சார்ஜ் ஆகி இன்று(டிச. 4) வீடு திரும்பியுள்ளார்.

கமல்ஹாசன்

கமல்ஹாசன் சமீபத்தில் கதர் ஆடை தொடர்பான நிகழ்ச்சிக்காக அமெரிக்கா சென்று திரும்பினார். அதன்பின் அவருக்கு கொரோனா நோய் தொற்று ஏற்பட கடந்த நவ. 22ம் தேதி சென்னை, ராமச்சந்திரா மருத்துவமனையில் அனுமதிக்கப்பட்டார்.

மருத்துவமனையில் கமல்ஹாசன்.. பிக்பாஸ் நிகழ்ச்சியிலிருந்து விலகலா?..  வேதனையில் ரசிகர்கள் | Kamal Haasan will quit from BB5? - Tamil Oneindia

பின்னர் கடந்த வாரம் கமல்ஹாசன் கொரோனா தொற்றிலிருந்து முற்றிலுமாக குணமடைந்து விட்டதாகவும், எனினும் சில நாட்களுக்கு தனிமையில் இருப்பார் என்றும் மருத்துவமனை அறிக்கை வெளியிட்டிருந்தது.

இந்த நிலையில் இன்று கமல்ஹாசன் மருத்துவமனையிலிருந்து டிஸ்சார்ஜ் செய்யப்பட்டு வீடு திரும்பியுள்ளார்.

ALSO READ  ஸ்டெர்லைட் ஆலையின் மூலம் அரசு மருத்துவமனைக்கு 6.34 மெட்ரிக் டன் ஆக்சிஜன் !

ராமச்சந்திரா மருத்துவமனை வெளியிட்ட அறிக்கையில்,

கொரோனா நோய் தொற்றிலிருந்து நடிகர் கமல்ஹாசன் முழுமையாக குணமடைந்து இன்று டிஸ்சார்ஜ் செய்யப்படுகிறார். இனி வழக்கமான அவரது பணிகளை தொடரலாம் என தெரிவிக்கப்பட்டுள்ளது.

கமல்ஹாசன் வெளியிட்டுள்ள அறிக்கையில் கூறப்பட்டுள்ளதாவது:-

மருத்துவமனை வாசம் முடித்து இன்று பணிக்கு திரும்பினேன். நலமாக இருக்கிறேன். என்னை தன் சொந்த சகோதரன் போல் கவனித்து சிகிச்சை அளித்த மருத்துவமனைக்கு நன்றி.

ALSO READ  இந்தியாவின் முதல் கொரோனா நோயாளிக்கு மீண்டும் கொரோனா தொற்று…!

நான் விரைந்து நலம் பெற வேண்டுமென வாழ்த்திய முதல்வர் ஸ்டாலின் உள்ளிட்ட அரசியல் தலைவர்கள், நண்பர் ரஜினிகாந்த் உள்ளிட்ட திரையுலகினர், விடுப்பை திறம்பட சமாளித்த இயக்குனர் லோகேஷ் கனகராஜ் உள்ளிட்ட விக்ரம் படக்குழு, பிக்பாஸ் குழுவினருக்கு நன்றி.

நான் விரைந்து குணமடைய பிரார்த்தனை செய்தும், அன்னதானம், ரத்ததானம் செய்த ரசிகர்கள், மக்கள் நீதி மைய உறுப்பினர்கள், என்னை என் வீட்டில் ஒருவனாக கருதி எனக்காக கண்கலங்கிய தமிழக மக்களுக்கும் என் நன்றிகள். பிரார்த்தனைகளுக்கு பலன் உண்டா என எனக்கு தெரியாது.

ஆனால் உங்கள் அன்பின் வலிமையை அறிந்தவன் நான். உங்கள் தூய பேரன்பு அல்லவா என்னை கொரோனாவிலிருந்து கரை சேர்த்திருக்கிறது. என் மீது அக்கறை கொண்ட மனங்களுக்கு நன்றி. உதவிய உள்ளங்களுக்கு, கலங்கிய கண்களுக்கு நன்றி. உன்னத உறவுகளை தந்த வாழ்க்கைக்கு நன்றி என தெரிவித்துள்ளார்.


Share
தமிழ்நாடு, இந்தியா, உலகம், சினிமா, விளையாட்டு, செய்திகளை உடனுக்குடன் தெரிந்துகொள்ள Tamil Thisai டெலிகிராம் சேனலுடன் எப்போதும் இணைந்திருங்கள்.

Related posts

“டெல்லி கலவரம்” குறித்து மத்திய அரசை கடுமையாக கண்டித்த ரஜினிகாந்த்

Admin

நலிந்த கலைஞர்களுக்கு மாதாந்திர நிதி உதவி வழங்கும் திட்டம்- முதல்வர் ஸ்டாலின்…!

naveen santhakumar

நடிகர் ரஜினிகாந்துடன் இந்திய ஹஜ் அசோசியேஷன் தலைவர் சந்திப்பு……

naveen santhakumar