தமிழகம்

பிறந்தநாளில் கருப்பு உடையில் கலக்கிய உலகநாயகன்:

தமிழ்நாடு, இந்தியா, உலகம், சினிமா, விளையாட்டு, செய்திகளை உடனுக்குடன் தெரிந்துகொள்ள Tamil Thisai டெலிகிராம் சேனலுடன் எப்போதும் இணைந்திருங்கள்.
Share

திருவள்ளூர்:

தமிழ் திரைப்பட நடிகரும், மக்கள் நீதி மய்ய கட்சியின் தலைவருமான கமலஹாசனின் பிறந்தநாள் இன்று கொண்டாடப்பட்டு வருகிறது. இந்த நிலையில் பூந்தமல்லி அடுத்துள்ள செம்பரம்பாக்கத்தில் ஈ.வி.பி பிலிம்சிட்டியில் நடைபெறும் தனியார் தொலைக்காட்சி நிகழ்ச்சியின் படப்பிடிப்பில் கலந்து கொள்ள வருகை தந்தார். 

அப்போது மக்கள் நீதி மய்ய கட்சித் தொண்டர்கள் குமணன்சாவடியில் , அவருக்கு வரவேற்பு அளித்து, பூந்தமல்லி வரை, தேசிய நெடுஞ்சாலையில் ஏராளமான தொண்டர்கள் மோட்டார் சைக்கிளில் பேரணியாக ஈ. வி. பி பிலிம்சிட்டி வரை மேளதாளங்கள் முழங்க, பட்டாசுகள் வெடித்தும் ஊர்வலமாக வரவேற்பு அளித்தனர்.ஈ. வி. பி பிலிம் சிட்டி வந்தவுடன் காரின் மேல் பகுதியில் நின்று கட்சி தொண்டர்களை பார்த்து கையசைத்தார்.

ALSO READ  சபாஷ் சென்னை மாநகராட்சி... கழிவு மேலாண்மையில் புதிய முயற்சி....

அதனை தொடர்ந்து நடிகர் கமலுக்கு பூசணிக்காய் சுற்றியும் கும்ப மரியாதை வழங்கப்பட்டது. ரசிகர்களின் வரவேற்பை ஏற்றுக் கொண்டு பின்னர் படப்பிடிப்புக்கு சென்றார்.நடிகர் கமலஹாசனை காண கட்சி நிர்வாகிகள் மற்றும் ரசிகர்கள் ஏராளமானோர் திரண்டதால், பூந்தமல்லி நெடுஞ்சாலையில் போக்குவரத்து நெரிசல் ஏற்பட்டது.

பிறந்தநாள் மற்றும் சுப நிகழ்ச்சிகளில் கருப்பு உடைகள் அணியக்கூடாது என வழக்கமாக உள்ள நிலையில், அதற்கு மாறாக தனது பிறந்த நாளன்று நடிகர் கமல் கருப்புச் சட்டையில் வந்தது கட்சியினர் மத்தியில் பேசும் பொருளாக இருந்தது.


Share
தமிழ்நாடு, இந்தியா, உலகம், சினிமா, விளையாட்டு, செய்திகளை உடனுக்குடன் தெரிந்துகொள்ள Tamil Thisai டெலிகிராம் சேனலுடன் எப்போதும் இணைந்திருங்கள்.

Related posts

போலீஸா! அப்போ பால் கிடையாது: பால் முகவர்கள் சங்கம் அதிரடி… 

naveen santhakumar

தமிழக காவல்துறையினருக்கு முதல்வரின் முத்தான அறிவிப்பு..!

Shobika

சூர்யாவின் பதிலடி….பொதுச்செயலாளரின் மறுப்பு….

naveen santhakumar