தமிழகம்

குமரியை புரட்டி போட்ட யாஷ் புயல்; வாழ்வாதாரத்தை இழந்த பொதுமக்கள் !

தமிழ்நாடு, இந்தியா, உலகம், சினிமா, விளையாட்டு, செய்திகளை உடனுக்குடன் தெரிந்துகொள்ள Tamil Thisai டெலிகிராம் சேனலுடன் எப்போதும் இணைந்திருங்கள்.
Share

கன்னியாகுமரி மாவட்டத்தில் கடந்த 15 நாட்களுக்கு மேலாக விட்டு விட்டு மழை பெய்து வந்த நிலையில், தற்போது யாஸ்  புயல் எதிரொலியாக இடை விடாமல் தொடர்ந்து கனமழை நேற்று முதல் இன்று வரையில் பெய்து வந்தது.

இதன் காரணமாக மாவட்டத்தில் உள்ள அணைகள் உட்பட நீர்நிலைகள் அனைத்தும் நிரம்பியுள்ளன. சில குளங்களில்  உடைப்பு ஏறுபட்டுள்ளது. இதன் காரணமாக குடியிருப்பு பகுதிகளில் தண்ணீர் புகுந்து மக்களின் இயல்பு வாழ்க்கை பாதிப்படைந்துள்ளது.

கீரிப்பாறை பகுதியில் உள்ள தரைப்பாலம்  மழை தண்ணீர் காரணமாக அடித்து செல்லப்பட்டதால் அங்குள்ள 50 க்கு மேற்பட்ட குடும்பங்கள் வெளியே வர முடியாத சூழல் உருவாகியுள்ளது. அதேபோன்று  ரப்பர் பால் வெட்டும் தொழிலாளர்களும் பாதிப்படைந்துள்ளனர்.

இதனையடுத்து  நேரில் சென்று கன்னியாகுமரி சட்டமன்ற உறுப்பினர் தளவாய் சுந்தரம் பார்வையிட்டார். ஏற்கனவே அப்பகுதியில் நிரந்தரபாலம்  கட்ட அரசு திட்டமிட்டிருந்த  நிலையில் அப்பணியை உடனடியாக தமிழக அரசு நடவடிக்கை எடுக்க முயற்சி மேற்கொள்வதாகவும் அப்பகுதியினரிடம்  உறுதி கூறினார். 

ALSO READ  'அன்பறிவு' படத்தில் நடிக்கும் ஹிப் ஹாப் ஆதி... அதிகாரப்பூர்வ அறிவிப்பு

மேலும் திருப்பதிசாரம் பகுதியில் ஏற்பட்ட சேதங்களையும், பள்ளம் மீனவ கிராமத்தில் ஏற்பட்ட சேதங்களையும்  பார்வையிட்டார்.  இராஜாக்கமங்கலம் – பறக்கை சாலையில் ஆற்றில் இருந்து அடித்து வரப்பட்ட ஆகாயத்தாமரை மற்றும் கழிவுகளை அப்புறப்படுத்த ஜே.சி.பி., இயந்திரம் மூலம் நடவடிக்கை மேற்கொண்டதோடு, அப்பகுதியினரை தங்க வைத்து அவர்களுக்கு உணவு வழங்கவும் ஏற்பாடு செய்து கொடுத்தார்.  


Share
தமிழ்நாடு, இந்தியா, உலகம், சினிமா, விளையாட்டு, செய்திகளை உடனுக்குடன் தெரிந்துகொள்ள Tamil Thisai டெலிகிராம் சேனலுடன் எப்போதும் இணைந்திருங்கள்.

Related posts

எஸ்ஆர்எம் காலேஜ் மாணவர்கள் கையில் இருந்தது தீபாவளி துப்பாக்கியா ? நிஜத் துப்பாக்கியா.!

Admin

வருமான வரித்துறைக்கு நன்றி சொன்ன அஜித்.. இணையத்தில் வைரலாகும் அறிக்கை.

naveen santhakumar

வாகனங்களுக்கு 5 ஆண்டுகள் காப்பீடு கட்டாயம் – சென்னை உயர்நீதிமன்றம்!

News Editor