தமிழகம்

சென்னை ஜுடோ பயிற்சியாளர் கெபிராஜ் மீதான பாலியல் வழக்கை CBCID-க்கு மாற்ற உத்தரவு

தமிழ்நாடு, இந்தியா, உலகம், சினிமா, விளையாட்டு, செய்திகளை உடனுக்குடன் தெரிந்துகொள்ள Tamil Thisai டெலிகிராம் சேனலுடன் எப்போதும் இணைந்திருங்கள்.
Share

சென்னை:

சென்னை கே.கே.நகர் பத்ம சேஷாத்ரி பள்ளியில் ஆன்லைன் வகுப்பில் மாணவிகளுக்கு பாலியல் தொல்லை கொடுத்ததாக ஆசிரியர் ராஜகோபாலன் போக்சோ சட்டத்தில் கைதானார்.

அவர் மீது ஏராளமான மாணவிகள் தொடர்ந்து புகார் தெரிவித்து வருகிறார்கள். இதையடுத்து ஆசிரியர் ராஜகோபாலனை போலீசார் காவலில் எடுத்து விசாரித்தனர்.இந்த பரபரப்பு அடங்குவதற்குள் சேத்துப்பட்டு மகரிஷி வித்யா மந்திர் பள்ளி ஆசிரியர் ஆனந்தன், சென்னை பிரைம் தடகள பயிற்சி மையத்தின் பயிற்சியாளர் நாகராஜன் என்பவரும் பாலியல் தொந்தரவு புகாரில் அடுத்தடுத்து கைது செய்யப்பட்டு சிறையில் அடைக்கப்பட்டனர்.

இந்நிலையில் அண்ணாநகர் கிளையில் செயல்பட்டு வரும் பத்ம சேஷாத்ரி மில்லினியம் பள்ளியில் கராத்தே பயிற்சியாளராக பணியாற்றி வந்த கெபிராஜ் என்ற கராத்தே மாஸ்டர் மீதும் 26 வயது இளம்பெண் ஒருவர் 7 ஆண்டுக்கு பிறகு பாலியல் குற்றச்சாட்டு தெரிவித்து இருப்பது மீண்டும் பரபரப்பை ஏற்படுத்தி உள்ளது.

அண்ணாநகரை சேர்ந்த அந்த இளம்பெண் கடந்த 2014-ம் ஆண்டு கெபிராஜ் நடத்திய தற்காப்பு கலை பயிற்சி மையத்தில் சேர்ந்து பயிற்சி பெற்றார்.அப்போது ஜூடோ போட்டிக்காக நாமக்கல் சென்றுவிட்டு திரும்பி காரில் வந்த போது அந்த இளம்பெண்ணை பலவந்தப்படுத்தி கெபிராஜ் பாலியல் தொந்தரவு செய்து உள்ளார்.இதற்கு ஒத்துழைக்காததால் அந்த பெண்ணுக்கு கொலை மிரட்டல் விடுத்து இருக்கிறார்.இது பற்றி அந்த பெண் தற்போது அண்ணாநகர் அனைத்து மகளிர் போலீஸ் நிலையத்தில் புகார் செய்தார். இது தொடர்பாக போலீசார் பெண்கள் வன்கொடுமை தடுப்பு சட்டத்தின் கீழ் வழக்குப்பதிவு செய்து கராத்தே மாஸ்டர் கெபிராஜை அதிரடியாக கைது செய்தனர்.

ALSO READ  பிரபல இந்தி நடிகரின் மகள் வெளியிட்ட அதிர்ச்சி வீடியோ…!!!!!

இது பற்றிய புகார்களை பாதிக்கப்பட்ட மாணவிகள், பெண்கள் தெரிவிக்கலாம் என்று போலீசார் தெரிவித்து உள்ளனர்.இந்நிலையில் தற்காப்பு கலை பயிற்சி ஆசிரியர் கெபிராஜ் மீதான பாலியல் வழக்கு CBCID.க்கு மாற்றம் செய்யப்பட்டுள்ளது.சென்னை பெருநகர காவல் ஆணையர் வழக்கை CBCID விசாரணைக்கு பரிந்துரை செய்திருந்த நிலையில் வழக்கு மாற்றப்பட்டுள்ளது.


Share
தமிழ்நாடு, இந்தியா, உலகம், சினிமா, விளையாட்டு, செய்திகளை உடனுக்குடன் தெரிந்துகொள்ள Tamil Thisai டெலிகிராம் சேனலுடன் எப்போதும் இணைந்திருங்கள்.

Related posts

ஈ.வெ.ரா பெரியாரின் பிறந்தநாளான செப்டம்பர் 17 ம் தேதி சமூக நீதி நாளாக கொண்டாடப்படும்; மு.க.ஸ்டாலின் அறிவிப்பு..!

Admin

Swiggy, Zomato மற்றும் Dunzo போன்ற உணவு விநியோக நிறுவனங்கள் மூலம், வீடுகளுக்கு காய்கறிகள் விநியோகம்- CMDA…

naveen santhakumar

காவலர் வீரவணக்க நாள்- ஸ்டாலின் வாழ்த்து- தமிழக டி.ஜி.பி. சைலேந்திர பாபு மரியாதை செலுத்தினார்

naveen santhakumar