தமிழகம்

கோவில்பட்டி கடலை மிட்டாய்க்கு புவிசார் குறியீடு வழங்கியது மத்திய அரசு….

தமிழ்நாடு, இந்தியா, உலகம், சினிமா, விளையாட்டு, செய்திகளை உடனுக்குடன் தெரிந்துகொள்ள Tamil Thisai டெலிகிராம் சேனலுடன் எப்போதும் இணைந்திருங்கள்.
Share

கோவில்பட்டி:-

கோவில்பட்டி கடலை மிட்டாய்க்கு புவிசார் குறியீடு கிடைத்துள்ளது என்று நோடல் அதிகாரி சஞ்சய் காந்தி தெரிவித்துள்ளார்.

கோவில்பட்டி என்ற உடன் தமிழகத்தில் பெரும்லானோருக்கு சட்டென்று நினைவில் வருவது கடலை மிட்டாய் தான். கடலை மிட்டாய் என்பது தமிழகத்தில் பரவலாக அனைத்து மாவட்டங்களிலும் கிடைக்கக்கூடியது என்றாலும் கோவில்பட்டி கடலை மிட்டாய் என்றால் அதன் சுவை இன்னும் அதிகம் ஆகும். 

ALSO READ  தமிழில் அர்ச்சனை….அனைத்து சாதியினரும் அர்ச்சகர் ஆகலாம்….!!!!

இங்கு தயாரிக்கப்படும் கடலை மிட்டாய் இந்தியா மட்டுமின்றி வெளிநாடுகளுக்கும் அதிகளவு ஏற்றுமதி செய்யப்படுகிறது. கோவில்பட்டி கடலை மிட்டாய்க்கு புவிசார் குறியீடு கோரி 2014ம் ஆண்டு விண்ணப்பிக்கப்பட்டது.  இந்நிலையில் தற்போது மத்திய அரசு வழங்கியுள்ளது. 

முன்னதாக பழநி பஞ்சாமிர்தத்திற்கு சமீபத்தில் புவிசார் குறியீடு வழங்கப்பட்டிருந்த நிலையில், தற்போது கோவில்பட்டி கடலை மிட்டாய்க்கு புவிசார் குறியீடு வழங்கப்பட்டிருப்பது குறிப்பிடத்தக்கது.


Share
தமிழ்நாடு, இந்தியா, உலகம், சினிமா, விளையாட்டு, செய்திகளை உடனுக்குடன் தெரிந்துகொள்ள Tamil Thisai டெலிகிராம் சேனலுடன் எப்போதும் இணைந்திருங்கள்.

Related posts

இது அன்பில் மகேஷின் Fitness Chellenge…!

naveen santhakumar

ஊரடங்கால் வீடுவீடாகச் சென்று மாணவர்களைத் தயார்படுத்தும் தமிழாசிரியை!…

naveen santhakumar

முதல் கூட்டத்தொடர் தமிழ்த்தாய் வாழ்த்துடன் தொடக்கம்!

naveen santhakumar