தமிழகம்

கள்ளச்சாராய உயிரிழப்பு – சிபிசிஐடி விசாரணைக்கு மாற்றம்?

தமிழ்நாடு, இந்தியா, உலகம், சினிமா, விளையாட்டு, செய்திகளை உடனுக்குடன் தெரிந்துகொள்ள Tamil Thisai டெலிகிராம் சேனலுடன் எப்போதும் இணைந்திருங்கள்.
Share

கள்ளசாராய மரணம் தொடர்பாக சிபிசிஐடி விசாரணைக்கு உத்தரவிடப்படும் என முதலமைச்சர் மு.க.ஸ்டாலின் தெரிவித்துள்ளார்.

விழுப்புரம் மாவட்டம் மரக்காணம் எக்கியார்குப்பத்தில் கள்ளச்சாராயம் அருந்தியதால் 11 பேர் பலியாகியுள்ளனர். 34 பேர் முண்டியம்பாக்கம் அரசு மருத்துவமனையில் சிகிச்சை பெற்று வருகின்றனர். இது தொடர்பாக விழுப்புரம் மாவட்டம் முழுவதும் சாராய விற்பனையில் ஈடுபட்ட பலர் கைது செய்யப்பட்டு வருகின்ற நிலையில், விழுப்புரம் மாவட்டத்திற்கு முதலமைச்சர் மு.க.ஸ்டாலின் சென்று மருத்துவமனையில் சிகிச்சை பெறுபவர்கள் ஒவ்வொருவரையும் தனித்தனியே சந்தித்து நலம் விசாரித்தார். மேலும் அவர்களுக்கு அளிக்கப்படும் சிகிச்சைகள் குறித்து முதலமைச்சர் மு.க ஸ்டாலின் கேட்டறிந்தார். அதன் பின்னர் செய்தியாளர்கள் சந்தித்த முதலமைச்சர் மு.க.ஸ்டாலின், கள்ளச்சாராயத்தில் மெத்தனாலை பயன்படுத்தியதால் உயிரிழப்பு ஏற்பட்டுள்ளது.

கள்ளசாராயம் குடித்து உடல்நிலை பாதிக்கப்பட்டோருக்கு நல்ல முறையில் சிகிச்சை அளிக்கப்பட்டு வருகிறது. கள்ளச்சாராய உயிரிழப்பு தொடர்பான வழக்குகள் சிபிசிஐடி விசாரணைக்கு மாற்றப்படும். மரக்காணம் சம்பவத்தில் தொடர்புடைய அனைவரும் கைது செய்யப்பட்டுள்ளனர். கள்ளச் சாராய விற்பனையை முழுமையாக தடுக்க வேண்டும் என்ற உத்தரவை நடைமுறைப்படுத்த தவறியவர்கள் மீது நடவடிக்கை எடுக்கப்படும். கள்ளச்சாரய விற்பனையில் ஈடுபட்ட அனைவரையும் கைது செய்ய காவல்துறை நடவடிக்கை எடுத்து வருகிறது” இவ்வாறு அவர் கூறினார்.


Share
ALSO READ  சொத்து குவிப்பு வழக்கில் தண்டனை காலம் முடிந்தது : சுதாகரன் விடுதலை
தமிழ்நாடு, இந்தியா, உலகம், சினிமா, விளையாட்டு, செய்திகளை உடனுக்குடன் தெரிந்துகொள்ள Tamil Thisai டெலிகிராம் சேனலுடன் எப்போதும் இணைந்திருங்கள்.

Related posts

மது பாட்டிலுக்குள் கிடந்த தவளை… மதுப் பிரியர்கள் அதிர்ச்சி….

naveen santhakumar

ஜனவரியில் விடுதலையாகிறாரா சசிகலா?????

naveen santhakumar

உயர்நீதிமன்ற வளாகத்தில் தீக்குளித்த நபரால் பரபரப்பு..

Shanthi