தமிழகம்

தமிழகத்தில் யூ-டியூப்பிற்கு தடை?… உயர்நீதிமன்ற மதுரைக்கிளை பரபரப்பு உத்தரவு!

youtube
தமிழ்நாடு, இந்தியா, உலகம், சினிமா, விளையாட்டு, செய்திகளை உடனுக்குடன் தெரிந்துகொள்ள Tamil Thisai டெலிகிராம் சேனலுடன் எப்போதும் இணைந்திருங்கள்.
Share

யூடியூப்பில் தவறான பதிவுகள் வெளிவருவது குறித்த வழக்கு ஒன்று உயர்நீதிமன்றம் மதுரை கிளையில் இன்று விசாரணைக்கு வந்தது.

இந்த விசாரணையில் நீதிபதி புகழேந்தி பேசியதாவது: யூடியூப்பை பார்த்து சாராயம் காய்ச்சுவது, துப்பாக்கிச் செய்வது போன்று பலர் சாட்சி தெரிவித்துள்ளனர். அறிவியல் வளர்ச்சியை தவறாக பயன்படுத்துவதை ஏற்றுக்கொள்ள முடியாது.

ஒருவர் தவறு செய்ய துணைபுரிந்தால் சட்டப்படி யூடியூப்பும் குற்றவாளிதான். தவறான வீடியோக்கள் பதிவேற்றம் செய்யப்படுவதில் யூடியூப் நிறுவனமும் உடந்தையா? யூடியூப்பிற்கு ஏன் தடை விதிக்க கூடாது?

ALSO READ  லஞ்சம் வாங்கிய பெண் கிராம நிர்வாக அலுவலர் கைது:

யூடியூப்பில் வெடிகுண்டுகள் தயாரிப்பது போன்ற வீடியோக்களை தடுக்க என்ன நடவடிக்கை எடுக்கப்பட்டுள்ளது? யூடியூப்பில் சில நல்ல விஷயங்கள் உள்ளன. இருப்பினும், இதுபோன்ற பதிவுகளை தடை செய்ய வேண்டும்.

வெளி மாநிலங்களில் இருந்து தேவையற்ற பதிவுகளை தடுக்க அரசிடம் என்ன திட்டங்கள் உள்ளன? யூடியூபில் வரும் தவறான விஷயங்களை அரசு தடுக்க வேண்டாமா? தடுப்பதற்கான சாத்தியக்கூறுகள் என்ன? இது குறித்து சைபர் கிரைம் டிஜிபி விரிவான விவரங்களை சேகரித்து ஒரு வாரத்திற்குள் சமர்ப்பிக்க வேண்டும் என உத்தரவிட்டுள்ளார்.


Share
தமிழ்நாடு, இந்தியா, உலகம், சினிமா, விளையாட்டு, செய்திகளை உடனுக்குடன் தெரிந்துகொள்ள Tamil Thisai டெலிகிராம் சேனலுடன் எப்போதும் இணைந்திருங்கள்.

Related posts

தமிழகத்தில் 28 ஆயிரமாக குறைந்த கொரோனா பாதிப்பு !

News Editor

பேரவை வரலாற்றிலேயே முதல் முறை… கெத்து காட்டும் ஸ்டாலின்!

naveen santhakumar

புதிய தளர்வுகளுடன் ஆகஸ்ட் 31 வரை ஊரடங்கு நீட்டிப்பு- தமிழக அரசு… 

naveen santhakumar