தமிழகம்

சென்னையை தொடர்ந்து மதுரைக்கும் மெட்ரோ ரயில்

தமிழ்நாடு, இந்தியா, உலகம், சினிமா, விளையாட்டு, செய்திகளை உடனுக்குடன் தெரிந்துகொள்ள Tamil Thisai டெலிகிராம் சேனலுடன் எப்போதும் இணைந்திருங்கள்.
Share

சென்னை

தமிழகத்தின் இரண்டாவது பெரிய நகரம் மதுரை. ஆனால் கடும் போக்குவரத்து நெரிசல் மிகுந்த நகரங்களில் மதுரையம் உண்டு.

Chennai Metro Route Map, Timings, Lines, Facts - FabHotels

குறிப்பாக தென்மாவட்ட மக்கள் அதிகம் வந்து செல்லும் முக்கிய நகராக விளங்கும் மதுரையில் மக்கள் தொகை பெருக்கம் அதிகரித்துக் கொண்டே உள்ளது.. அனால் மக்கள் தொகை பெருக்கத்ததிற்கு ஏற்ப மதுரை நகரத்தில் சாலை வசதிகள் இல்லை. அதுபோன்று சாலை போக்குவரத்தை தவிர இதர போக்குவரத்து வசதி இல்லை.

ALSO READ  மாதம் தோறும் ரூ.1000 திட்டம்; தொடங்கி வைத்தார் முதல்வர் !

எனவே மதுரையில் வசிக்கும் மக்கள் பெரும்பாலான நாள்களில் கடும் போக்குவரத்து நெருக்கடியைச் சந்தித்து வருகின்றார்கள். எனவே மதுரை நகரின் போக்குவரத்து நெரிசலை குறைக்க மெட்ரோ ரயில் போன்ற திட்டங்களை அமல்படுத்த வேண்டுமென தொடர் கோரிக்கை எழுந்து வந்தது.

Why no Metro Rail for our Madurai? asks TN Chamber - Lotus Times | Madurai  | Tamilnadu | Lotus Times

இந்நிலையில் சட்டசபையில் பட்ஜெட் தாக்கல் செய்த போது நிதியமைச்சர் பி.டி.ஆர்.பழனிவேல் தியாகராஜன், மதுரையில் மெட்ரோ ரயில் திட்டத்தை நிறைவேற்றுவதற்கான சாத்தியக் கூறுகள் குறித்து விரைவில் ஆய்வுப் பணிகள் துவங்கும் என அறிவித்திருந்தார்.

ALSO READ  திமுகவைச் சேர்ந்த 4 ஆவது எம்.எல்.ஏ.வுக்கு கொரோனா...

இந்நிலையில், மதுரையில் மெட்ரோ ரயில் திட்டத்தை நிறைவேற்றுவதற்கான சாத்தியக் கூறுகளை ஆராய்வதற்கான பணிகளை மேற்கொள்வதற்கான டெண்டர் அறிவிப்பை சென்னை மெட்ரோ ரயில் நிறுவனம் வெளியிட்டுள்ளது குறிப்பிடத்தக்கது.


Share
தமிழ்நாடு, இந்தியா, உலகம், சினிமா, விளையாட்டு, செய்திகளை உடனுக்குடன் தெரிந்துகொள்ள Tamil Thisai டெலிகிராம் சேனலுடன் எப்போதும் இணைந்திருங்கள்.

Related posts

கொரோனா முன்களப் பணியாளார்களுக்கு ஊக்கத்தொகை அறிவிப்பு !

News Editor

தளர்வுகளற்ற ஊரடங்கு நீட்டிப்பா…? முதல்வர் மு.க ஸ்டாலின் ஆலோசனை !

News Editor

கோயம்பேட்டில் இருந்து புறப்படும் பேருந்தின் கால அட்டவணை மாற்றம் !

News Editor