தமிழகம்

நாடு முழுவதும் களைக்கட்டும் ‘மஹா சிவராத்திரி’

தமிழ்நாடு, இந்தியா, உலகம், சினிமா, விளையாட்டு, செய்திகளை உடனுக்குடன் தெரிந்துகொள்ள Tamil Thisai டெலிகிராம் சேனலுடன் எப்போதும் இணைந்திருங்கள்.
Share

நாடு முழுவதும் மஹா சிவராத்திரியை முன்னிட்டு சிவாலயங்களில் பக்தர்கள் கூட்டம் அலைமோதுகிறது.

மாசி மாதத்தின் தேய்பிறை சதுர்த்தசி திதியில் அம்பிகை சிவபெருமானை வணங்கியதாக கூறப்படும் நாளான மகா சிவராத்திரி இன்று இரவு கொண்டாடப்படுகிறது.

சிவராத்திரியன்று விரதம் இருக்கும் பக்தர்கள் இரவு முழுவதும் கண் விழித்து, சிவபெருமானின் திருநாமமான ‘ஓம் நமச்சிவாய’ என்பதை ஜபித்து தேவாரம், திருவாசகம் பாடல்களை பாடி சிவனுக்கு பூஜைசெய்தும் வழிபாடு செய்வது வழக்கம். இதற்காக நாடு முழுவதும் உள்ள சிவாலயங்களில் சிறப்பு ஏற்பாடுகள் செய்யப்பட்டுள்ளன.

ALSO READ  கரகாட்டக்காரியுடன் தொடர்பு… இளைஞனை கொலை செய்த நண்பர்கள்

கோவையில் உள்ள ஈஷா மையத்தில் மஹா சிவராத்திரி விழாவில் குடியரசுத்துணைத்தலைவர் உள்ளிட்ட முக்கிய பிரமுகர்கள் பங்கேற்கின்றனர். இதேபோல் தமிழகத்தில் உள்ள சிவாலயங்களில் நள்ளிரவு சிறப்பு பூஜைகளுக்கு ஏற்பாடு செய்யப்பட்டுள்ளது.

திருவண்ணாமலை. திருநெல்வேலி, காஞ்சிபுரம் உள்ளிட்ட முக்கிய சிவாலயங்களில் காலை முதலே பக்தர்கள் கூட்டம் அலைமோதுகிறது. இன்று நள்ளிரவு பரதநாட்டியம் உள்ளிட்ட பல்வேறு கலை நிகழ்ச்சிகள் நடைபெறும். இதனிடையே கன்னியாகுமரியில் பிரசித்திப்பெற்ற சிவாலய ஓட்டம் நேற்று தொடங்கியது குறிப்பிடத்தக்கது.


Share
தமிழ்நாடு, இந்தியா, உலகம், சினிமா, விளையாட்டு, செய்திகளை உடனுக்குடன் தெரிந்துகொள்ள Tamil Thisai டெலிகிராம் சேனலுடன் எப்போதும் இணைந்திருங்கள்.

Related posts

தயவுசெய்து மாஸ்க் போடுங்க; கையெடுத்து கும்பிட்ட காவல் ஆய்வாளர் !

News Editor

மீண்டும் காசி மீது கல்லூரி மாணவி ஒருவர் புகார்…..

naveen santhakumar

சென்னையின் அடையாளங்களுள் ஒன்றாக திகழும் அரண்மனைக்காரன் தெரு.

naveen santhakumar