தமிழகம்

அடுத்ததாக குஷ்பூவை சீண்டும் மீரா மிதுன் :

தமிழ்நாடு, இந்தியா, உலகம், சினிமா, விளையாட்டு, செய்திகளை உடனுக்குடன் தெரிந்துகொள்ள Tamil Thisai டெலிகிராம் சேனலுடன் எப்போதும் இணைந்திருங்கள்.
Share

நடிகை குஷ்பு சமீபத்தில் காங்கிரஸில் இருந்து விலகி பா.ஜ.க.வில் இணைந்தார். சில தினங்களுக்கு முன்பு வேல் யாத்திரை நிகழ்ச்சிக்கு சென்ற போது அவரது காரில் டேங்கர் லாரி மோதியது. இந்த விபத்தில் குஷ்பு அதிர்ஷ்டவசமாக தப்பினார்.இந்நிலையில் குஷ்புவின் அரசியல் நடவடிக்கைகளை நடிகை மீராமிதுன் விமர்சித்து உள்ளார்.

மீரா மிதுன் டுவிட்டரில் வெளியிட்டுள்ள பதிவில், “MLA சீட்டுக்கு DMK கட்சியில் சேர்ந்து 10 வருடம் DMK ஆட்சிக்கே வர முடியவில்லை.MP சீட்டுக்கு காங்கிரஸ் கட்சியில் சேர்ந்து 10 வருடம் காங்கிரசும் ஆட்சிக்கே வரமுடியவில்லை.

இப்போது பா.ஜ.க.வில் சேர்ந்து இருக்கிறீர்களே மேடம் குஷ்பு. கார் விபத்து டிராமா. எதிர்காலம் தேருமா???? கோலிவுட் மாஃபியாக்களால் தான் குஷ்பு பா.ஜனதாவில் சேர்ந்துள்ளார். திட்டம் என்ன குஷ்பு???” என்று குறிப்பிட்டு உள்ளார்.

ALSO READ  குஷ்புவின் ட்விட்டர் பக்கத்தில் ஹேக்கர்கள் கைவரிசை :

இதையடுத்து குஷ்பு யார் பெயரையும் குறிப்பிடாமல் தனது டுவிட்டர் பக்கத்தில், “மோசமானவர் என்று நிரூபித்தவரும், கவனத்தை ஈர்க்க பெயர் போனவருமான நடிகை எனது கவனத்தை ஈர்க்க முயற்சி செய்கிறார். நான் என்ன செய்வது” என்று குறிப்பிட்டு உள்ளார். குஷ்புவின் பதிவை பார்த்த அவரது ஆதரவாளர்கள் மீரா மிதுனைதானே சொல்கிறீர்கள். அவரை பொருட்படுத்தாமல் உங்கள் பணியை தொடருங்கள். மீராமிதுன் எல்லோரையுமே வம்புக்கு இழுக்கிறார் என்று கூறியுள்ளனர்.


Share
தமிழ்நாடு, இந்தியா, உலகம், சினிமா, விளையாட்டு, செய்திகளை உடனுக்குடன் தெரிந்துகொள்ள Tamil Thisai டெலிகிராம் சேனலுடன் எப்போதும் இணைந்திருங்கள்.

Related posts

தமிழகத்தில் குடியரசு தின விழா கொண்டாட்டம் இல்லை……..

naveen santhakumar

ஃபீனிக்ஸ் மாலுக்கு சென்றுவந்த தம்பதிகளுக்கு கொரோனா…

naveen santhakumar

கோவில்களில் தமிழில் அர்ச்சனை; பெண்களை அர்ச்சகராக்கும் திட்டம்- அமைச்சர் சேகர் பாபு !!

naveen santhakumar