தமிழகம்

பாதுகாப்பான புத்தாண்டை கொண்டாட காவல்துறையோடு இணைந்து அமைச்சர் விஜயபாஸ்கர் நடவடிக்கை

தமிழ்நாடு, இந்தியா, உலகம், சினிமா, விளையாட்டு, செய்திகளை உடனுக்குடன் தெரிந்துகொள்ள Tamil Thisai டெலிகிராம் சேனலுடன் எப்போதும் இணைந்திருங்கள்.
Share

சென்னை,தீவுத்திடலில் நடைபெற்ற 46வது இந்திய சுற்றுலா தொழிற் பொருட்காட்சியில், மக்கள் நல்வாழ்வு மற்றும் குடும்ப நலத்துறை சார்பில் அமைக்கப்பட்டுள்ள
அரங்குகளை சுகாதாரத்துறை அமைச்சர் விஜயபாஸ்கர் ஆய்வு செய்தார். தொடர்ந்து செய்தியாளர்களை சந்தித்த அவர், சுற்றுலா பொருட்காட்சியில் வைக்கப்பட்டுள்ள மக்கள் நலத்துறை அரங்கை நாள்தோறும் 2,500 முதல் 3,000 பேர் வந்து பார்த்து செல்வதாகவும், இதுவரை கண்காட்சியை பார்த்துச் சென்றவர்களில் 191 பேர் தங்களது உடல் உறுப்புகளை தானம் செய்ய பதிவு செய்து கொண்டுள்ளதாகவும் தெரிவித்தார்.

ALSO READ  அத்தியாவசிய பொருட்களின் விலையேற்றத்தை தடுத்து, உரிய நிவாரணம் வழங்க வேண்டும்- திமுக தலைவர் மு.க.ஸ்டாலின் வலியுறுத்தல்...

தொடர்ந்து புத்தாண்டையொட்டி மேற்கொள்ளப்பட்டுள்ள ஏற்பாடுகள் குறித்து பேசிய அமைச்சர் காவல்துறையோடு மக்கள் நல்வாழ்வு துறை இணைந்து பூஜியம் இறப்பை உறுதிசெய்ய அனைத்து நடவடிக்கைகளையும் எடுத்து வருவதாக தெரிவித்தார்.மக்கள் அதிகம் கூடும் இடங்களாக கண்டறியப்பட்டுள்ள வழிபாட்டுத்தளங்கள், விடுதிகள் ,கடற்கரைகள் உள்ளிட்ட இடங்களில் வழக்கத்தை விட கூடுதலாக 50 ஆம்புலன்ஸ் வாகனங்களும்,15 இருசக்கர ஆம்புலன்ஸ்களும் தயார் நிலையில் உள்ளதாகவும்,
இன்றைய தினம் அனைத்து ஆம்புலன்ஸ்களுக்கும் வாக்கி டாக்கி கொடுக்கப்பட்ட்டுள்ள
தாகவும், மருத்துவமனைகளில் இன்று மாலை 6 மணி தொடங்கி 2ஆம் தேதி காலை 7 மணிவரை சிகிச்சை பிரிவில் கூடுதல் மருத்துவர்கள் மற்றும் பணியாளர்கள் இருக்க உத்தரவிடப்பட்டுள்ளதாகவும் தெரிவித்தார்.

உடனடியாக முதலுதவி சிகிச்சை அளித்து உயிர் காக்கும் பணியை மக்கள் நலத்துறை துடிப்புடன் செய்ய தயாராக உள்ளதாக தெரிவித்தர்.மது அருந்திவிட்டு வாகனங்களை ஓட்டக் கூடாது என்ற காவல் துறையின் உத்தரவுகளை பின்பற்றி நடக்க வேண்டும் எனவும் கோரிக்கை விடுத்துள்ளார்.

ALSO READ  காவல்துறையில் 14,317 காலி இடங்கள் நிரப்பப்படும்- நிதியமைச்சர் பழனிவேல் தியாகராஜன்

பேட்டி..

சி.விஜயபாஸ்கர்

சுகாதாரத்துறை அமைச்சர்..


Share
தமிழ்நாடு, இந்தியா, உலகம், சினிமா, விளையாட்டு, செய்திகளை உடனுக்குடன் தெரிந்துகொள்ள Tamil Thisai டெலிகிராம் சேனலுடன் எப்போதும் இணைந்திருங்கள்.

Related posts

பி.எஸ்.பி.பி பள்ளியில் பாலியல் தொல்லை; தேசிய குழந்தைகள் உரிமை ஆணையம் விசாரணை !

News Editor

‘வாய்க்கு போடுங்க பூட்டு’ என்ற விழிப்புணர்வு குறும்படத்தை வெளியிட்டது காவல்துறை.

naveen santhakumar

டிஎன்பிஎஸ்சி-ன் அடுத்த அதிரடி சீர்திருத்தங்கள்.

naveen santhakumar