தமிழகம்

மருத்துவமனையிலிருந்து மாயமான சிறுமி..

தமிழ்நாடு, இந்தியா, உலகம், சினிமா, விளையாட்டு, செய்திகளை உடனுக்குடன் தெரிந்துகொள்ள Tamil Thisai டெலிகிராம் சேனலுடன் எப்போதும் இணைந்திருங்கள்.
Share

உடல் நலக்குறைவு காரணமாக சென்னை ராஜீவ் காந்தி அரசு மருத்துவமனையில் உடல் நலக்குறைவு காரணமாக சேர்க்கப்பட்ட சிறுமி, திடீரென காணாமல் போன நிலையில் சமூக வலைதளம் மூலம் கண்டுபிடிக்கப்பட்டார்.

சூளைமேட்டில் உள்ள பெண்கள் விடுதியில் தங்கியிருந்த ஒரு சிறுமி ராஜீவ் காந்தி அரசு மருத்துவமனையில் உடல் நலக்குறைவு காரணமாக சேர்க்கப்பட்டார். திடீரென அந்த சிறுமி மருத்துவமனையிலிருந்து காணாமல் போனதாக விடுதி ஊழியர்கள் காவல் நிலையத்தில் புகார் அளித்ததையடுத்து சிறுமியை போலீசார் தீவிரமாக தேடி வந்தனர். இந்நிலையில் அந்த சிறுமி சமூக வலைதள வீடியோக்கள் மூலம் பிரபலமான மற்றொரு பெண்ணுடன் எண்ணூர் சுனாமி குடியிருப்பில் இருப்பது தெரிய வந்தது. அச்சிறுமியின் இன்ஸ்டிராகிராம் பக்கம் மூலம் கண்டுபிடித்த போலீசார் சிறுமியை மீட்டு அறிவுரை கூறி தந்தையிடம் பாதுகாப்பாக ஒப்படைத்தனர். நண்பர்களுடன் சேர்ந்து வீடியோ தயாரிக்க சிறுமி மருத்துவமனையில் இருந்து சென்றது விசாரணையில் தெரியவந்துள்ளது.


Share
ALSO READ  'வதந்திகளை நம்ப வேண்டாம்' விஜயகாந்த் உடல்நிலை குறித்து தேமுதிக அறிக்கை !
தமிழ்நாடு, இந்தியா, உலகம், சினிமா, விளையாட்டு, செய்திகளை உடனுக்குடன் தெரிந்துகொள்ள Tamil Thisai டெலிகிராம் சேனலுடன் எப்போதும் இணைந்திருங்கள்.

Related posts

சென்னையில் கொரோனா வைரஸ் பாதிப்பா?

Admin

பொங்கல் விழாவை முன்னிட்டு கனடா பிரதமர் வாழ்த்து

Admin

காஞ்சிபுரத்தில் தேர்தல் அதிகாரி திடீர் உயிரிழப்பு – தேர்தல் நிறுத்தி வைப்பு..!

naveen santhakumar