தமிழகம்

தமிழ்நாட்டின் புதிய ஆளுநர் பதவியேற்பு எப்போது?

தமிழ்நாடு, இந்தியா, உலகம், சினிமா, விளையாட்டு, செய்திகளை உடனுக்குடன் தெரிந்துகொள்ள Tamil Thisai டெலிகிராம் சேனலுடன் எப்போதும் இணைந்திருங்கள்.
Share

தமிழ்நாட்டின் புதிய ஆளுநராக நியமிக்கப்பட்டுள்ள என்.ஆர். ரவி, வரும் 18ஆம் தேதி பதவியேற்க உள்ளதாக தகவல் வெளியாகியுள்ளது.

தமிழகத்திற்கு புதிய ஆளுநர் நியமனம்! | nakkheeran

தற்போது நாகலாந்து ஆளுநராக உள்ள அவர், வரும் 16ஆம் தேதி தமிழ்நாடு வர உள்ளார். அவருக்கு உயர் நீதிமன்ற தலைமை நீதிபதி சஞ்சிப் பானர்ஜி பதவிப் பிரமாணம் செய்துவைக்க உள்ளார்.

இந்த விழாவில் முதல்வர் மு.க. ஸ்டாலின் மற்றும் முக்கிய அதிகாரிகள் பங்கேற்பார்கள் என்று எதிர்பார்க்கப்படுகிறது. தமிழ்நாட்டின் ஆளுநராக தற்போது உள்ள பன்வாரிலால் புரோகித், பஞ்சாப் மாநில ஆளுநராக மாற்றப்பட்டுள்ள நிலையில், அவர் விரைவில் தமிழ்நாட்டிலிருந்து பஞ்சாப் சென்று ஆளுநராக பதவியேற்பார் என்று எதிர்பார்க்கப்படுகிறது.

ALSO READ  ஈக்வடார் நாட்டில் மருத்துவர் M.N. சங்கரின் அக்குபஞ்சர் மருத்துவமனை !
Governor News in Tamil, Latest Governor news, photos, videos | Zee News  Tamil

இதனிடையே பஞ்சாப்புக்கு செல்லும் பன்வாரிலால் புரோகித்தை நேற்று சென்னை கிண்டியில் உள்ள ஆளுநர் மாளிகையில் முதல்வர் மு.க ஸ்டாலின் மற்றும் அமைச்சர்கள் உள்ளிட்டோர் நேரில் சந்தித்து பேசினர். இன்று காலை பன்வாரிலால் புரோகித் பஞ்சாப் புறப்பட்டார்.


Share
தமிழ்நாடு, இந்தியா, உலகம், சினிமா, விளையாட்டு, செய்திகளை உடனுக்குடன் தெரிந்துகொள்ள Tamil Thisai டெலிகிராம் சேனலுடன் எப்போதும் இணைந்திருங்கள்.

Related posts

இசையமைப்பாளர் இனியவன் காலமானார்

naveen santhakumar

விஜய் மக்கள் இயக்கம் கலைப்பு: எஸ்.ஏ. சந்திரசேகர் அறிவிப்பு – ரசிகர்கள் அதிர்ச்சி!

News Editor

சென்னை மாணவியை காசி ஏமாற்றியது எப்படி????

naveen santhakumar