தமிழகம்

ஆன்லைன் வகுப்புகளில் ஆசிரியர்களுக்கு புதிய கட்டுப்பாடு !

தமிழ்நாடு, இந்தியா, உலகம், சினிமா, விளையாட்டு, செய்திகளை உடனுக்குடன் தெரிந்துகொள்ள Tamil Thisai டெலிகிராம் சேனலுடன் எப்போதும் இணைந்திருங்கள்.
Share

தமிழகத்தில் கொரோனா அதன் கோரமுகத்தை காட்டி வருகிறது. அதனால் தமிழகத்தில் முழு ஊரடங்கு அமல்படுத்தப்பட்டு பல்வேறு கட்டுப்பாடுகளை அறிவித்துள்ளது. அந்தவகையில் கல்லூரி, பள்ளி மாணவர்களுக்கு ஆன்லைன் வகுப்புகள் மூலம் ஆசிரியர்கள் வகுப்புகள் எடுக்கப்பட்டு வருகின்றன.

இந்நிலையில், சென்னையில் அமைந்துள்ள கே.கே.நகரிலுள்ள  பி.எஸ்.பி.பி பள்ளியில் மாணவிகளிடம்  பொருளியல் ஆசிரியர் ராஜகோபாலன் ஆன்லைன் வகுப்பில்  பாலியல் அத்துமீறலில் ஈடுபட்டுள்ளார். அதனையடுத்து அவர் பணியிடை நீக்கம் செய்யப்பட்டு  காவல்துறையினரால் கைது செய்யப்பட்டுள்ளார். 

இந்த சம்பவத்தையடுத்து விதிகளை கடுமையாக்க தமிழக அரசு முடிவு செய்துள்ளதாக தகவல் வெளியான நிலையில்  ஆசிரியர்களுக்கான விதிமுறைகளை கடுமையாக்குவது குறித்து சென்னையில் பள்ளிக் கல்வித்துறை அமைச்சர் அன்பில் மகேஷ் ஆலோசனை நடத்தினர்.

ALSO READ  பரமக்குடி அதிமுக எம்.எல்.ஏ-க்கு கொரோனா…

அதனையடுத்து செய்தியாளர்களை சந்தித்த பள்ளிக்கல்வித்துறை அமைச்சர், ஆன்லைன் வகுப்புகளுக்கான வழிகாட்டு நெறிமுறைகள் விரைவில் வெளியிடப்படும்.என தெரிவித்தார். ஆன்லைன் வகுப்புக்காக ஏற்கனவே உள்ள வழிமுறைகள் கடைப்பிடிக்கவில்லை எனத் தெரிகிறது என்றார்.


Share
தமிழ்நாடு, இந்தியா, உலகம், சினிமா, விளையாட்டு, செய்திகளை உடனுக்குடன் தெரிந்துகொள்ள Tamil Thisai டெலிகிராம் சேனலுடன் எப்போதும் இணைந்திருங்கள்.

Related posts

காவல் துறை தாக்கியதில் உயிரிழந்த வியாபாரி குடும்பத்துக்கு இழப்பீடு வேண்டும் – டிடிவி தினகரன்..!

News Editor

தஞ்சை பெரிய கோவில் கோபுரத்தில் மீண்டும் கலசம் பொருத்தப்பட்டது

Admin

இலங்கை தமிழர்களுக்கு அனைத்து வசதிகளுடன் மறுவாழ்வு முகாம்..

Shanthi