தமிழகம்

பள்ளிகள் திறப்பு குறித்து பெற்றோர்களிடம் கேட்கப்பட்ட கருத்துக்கேட்பு நிறைவு :

தமிழ்நாடு, இந்தியா, உலகம், சினிமா, விளையாட்டு, செய்திகளை உடனுக்குடன் தெரிந்துகொள்ள Tamil Thisai டெலிகிராம் சேனலுடன் எப்போதும் இணைந்திருங்கள்.
Share

சென்னை:

கொரோனா பரவலால் பள்ளிகள் மூடப்பட்டுள்ள நிலையில், பொதுத்தேர்வை கருத்தில் கொண்டு 10 மற்றும் 12-ம் வகுப்பு மாணவர்களுக்கு மட்டும் பள்ளிகளை திறக்கலாமா????? வேண்டாமா???? என்பது குறித்து கருத்துகளை கேட்க தமிழக அரசு முடிவு செய்தது.

அதன்படி பள்ளிக்கல்வித்துறை தமிழகம் முழுவதும் உள்ள 12 ஆயிரத்து 500-க்கும் மேற்பட்ட அரசு, அரசு உதவி பெறும் மற்றும் தனியார் உயர்நிலை மற்றும் மேல்நிலை பள்ளிகளுக்கு ஒரு சுற்றறிக்கையை அனுப்பியது. அதில் 10 மற்றும் 12-ம் வகுப்பு மாணவ-மாணவிகளின் பெற்றோர்களிடமிருந்து கருத்துகளை பெற்று அனுப்ப அறிவுறுத்தி இருந்தது.

ALSO READ  தமிழகத்தில் மேலும் 1 வாரம் ஊரடங்கினை நீட்டிக்க பரிந்துரை….

இதற்கான கருத்துக்கேட்பு கூட்டம் தமிழகம் முழுவதும் கடந்த 2 நாட்களாக  நடந்தது.பள்ளிகள் சம்பந்தப்பட்ட மாணவ-மாணவிகளின் பெற்றோரை நேரில் வரவழைத்து அவர்களின் கருத்துகளை கேட்டு வாங்கினர். அதன்படி, நேற்றுடன் கருத்துக்கேட்பு கூட்டம் நிறைவு பெற்றுள்ளது.பெற்றோரிடமிருந்து பெறப்பட்ட கருத்துகளை அந்தந்த பள்ளிகள், அந்தந்த மாவட்ட கல்வி அலுவலர்களிடம் நேற்று ஒப்படைத்தனர். 

அவர்கள் அதனை ஒருங்கிணைத்து மாவட்ட முதன்மை கல்வி அதிகாரிகளுக்கு வழங்கினர்.பெற்றோர் தெரிவித்த கருத்துகளை பள்ளிக்கல்வி இயக்ககத்துக்கு இன்று அனுப்ப இருக்கின்றனர்.பள்ளிக்கல்வி இயக்ககம் அந்த கருத்துகள் அனைத்தையும் ஒருங்கிணைத்து, பள்ளிகளை திறப்பதற்கு எவ்வளவு பேர் ஆதரவு தெரிவித்துள்ளார்கள்????? என்ற விவரங்களையும், எவ்வளவு பேர் எதிர்ப்பு தெரிவித்துள்ளார்கள்????? என்ற விவரங்களையும் அரசிடம் நாளைக்குள் சமர்ப்பிக்க உள்ளதாக தகவல்கள் வெளியாகி உள்ளது.


Share
தமிழ்நாடு, இந்தியா, உலகம், சினிமா, விளையாட்டு, செய்திகளை உடனுக்குடன் தெரிந்துகொள்ள Tamil Thisai டெலிகிராம் சேனலுடன் எப்போதும் இணைந்திருங்கள்.

Related posts

சென்னை வந்தார் குடியரசுத் தலைவர் ராம்நாத் கோவிந்த்- ஆளுநர், முதல்வர் வரவேற்பு…!

naveen santhakumar

மே 17 திருமுருகன் காந்திக்கு கொரோனா தொற்று…

naveen santhakumar

ரூ.20,000 நிவாரண தொகை – முதலமைச்சர் அறிவிப்பு

naveen santhakumar