தமிழகம்

அடுத்த 2 நாட்களுக்கு இந்த ரயில்கள் எல்லாம் ரத்து!

தமிழ்நாடு, இந்தியா, உலகம், சினிமா, விளையாட்டு, செய்திகளை உடனுக்குடன் தெரிந்துகொள்ள Tamil Thisai டெலிகிராம் சேனலுடன் எப்போதும் இணைந்திருங்கள்.
Share

சென்னை அரக்கோணம் – காட்பாடி பிரிவில் உள்ள முகுந்தராயபுரம் மற்றும் திருவலம் நிலையங்களுக்கு இடையிலான பாலம் எண்.299 -இல் ரயில் போக்குவரத்து தற்காலிகமாக நிறுத்தப்பட்டதால், டிசம்பர் 25 மற்றும் 26 ஆகிய தேதிகளில் எக்ஸ்பிரஸ் ரயில் சேவைகளில் பின்வரும் மாற்றங்கள் செய்யப்பட்டுள்ளதாக தெற்கு ரயில்வே அறிவித்துள்ளது. அவற்றின் விவரம்:

  1. ரயில் எண்: 12007, எம்ஜிஆர் சென்ட்ரல் ரயில் நிலையத்திலிருந்து காலை 6 மணிக்கு புறப்படும் மைசூர் சதாப்தி எக்ஸ்பிரஸ் ரயில் 25, 26 ஆகிய தேதிகளில் முழுமையாக ரத்து செய்யப்படுகிறது.

2. ரயில் எண்: 12008, மைசூரிலிருந்து மதியம் 2.15 மணிக்கு புறப்படும் மைசூரு – டாக்டர் எம்ஜிஆர் சென்னை சென்ட்ரல் எக்ஸ்பிரஸ் ரயில் 25 மற்றும் 26 ஆகிய தேதிகளில் முழுமையாக ரத்து செய்யப்படுகிறது.

3.ரயில் எண்: 12243 , டாக்டர் எம்ஜிஆர் சென்ட்ரல் ரயில் நிலையத்திலிருந்து காலை 7.10 மணிக்கு புறப்படும், கோயம்புத்தூர் சதாப்தி எக்ஸ்பிரஸ் ரயில், 25 மற்றும் 26 ஆகிய தேதிகளில் முழுமையாக ரத்து செய்யப்படுகிறது.

4. ரயில் எண்: 12244, கோயம்புத்திரிலிருந்து மதியம் 3.05 மணிக்கு புறப்படும் கோயம்புத்தூர் – டாக்டர் எம்ஜிஆர் சென்ட்ரல் சதாப்தி எக்ஸ்பிரஸ் ரயில், 25 மற்றும் 26 ஆகிய தேதிகளில் முழுமையாக ரத்து செய்யப்படுகிறது.

5. ரயில் எண் 22625, டாக்டர் எம்ஜிஆர் சென்ட்ரல் ரயில் நிலையத்திலிருந்து காலை 7.25 மணிக்கு புறப்படும் கேஎஸ்ஆர் டபுள் டக்கர் எக்ஸ்பிரஸ் ரயில், 25 மற்றும் 26 ஆகிய தேதிகளில் முழுமையாக ரத்து செய்யப்படுகிறது.

6. ரயில் எண் 22626, பெங்களூரிலிருந்து மதியம் 2.30 மணிக்கு புறப்படும் கேஎஸ்ஆர் – டாக்டர் எம்ஜிஆர் சென்ட்ரல் சதாப்தி எக்ஸ்ப்ரஸ் ரயில், 25 மற்றும் 26 ஆகிய தேதிகளில் முழுமையாக ரத்து செய்யப்படுகிறது.

7. ரயில் எண்: 12027 பெங்களூரிலிருந்து மாலை 5.30 மணிக்கு புறப்படும் கேஎஸ்ஆர் – டாக்டர் எம்ஜிஆர் சென்ட்ரல் சதாப்தி எக்ஸ்ப்ரஸ் ரயில் 25 மற்றும் 26 ஆகிய தேதிகளில் முழுமையாக ரத்து செய்யப்படுகிறது.

ALSO READ  சென்னை, காஞ்சிபுரம்,ஈரோடு 31ம் தேதி வரை லாக் டவுன்... என்னென்ன விதிமுறைகள் பின்பற்றப்படும்?? யார் யாருக்கு விதி விலக்கு அளிக்கப்படும்??

8.ரயில் எண்: 12028, டாக்டர் எம்ஜிஆர் சென்ட்ரல் ரயில் நிலையத்திலிருந்து காலை 6 மணிக்கு புறப்படும் கேஎஸ்ஆர் டபுள் டக்கர் எக்ஸ்பிரஸ் ரயில் 25 மற்றும் 26 ஆகிய தேதிகளில் முழுமையாக ரத்து செய்யப்படுகிறது.

9. ரயில் எண் 22649, டாக்டர் எம்ஜிஆர் சென்னை சென்ட்ரல் ரயில் நிலையத்திலிருந்து இரவு 11 மணிக்கு புறப்படும் ஈரோடு – ஏற்காடு எக்ஸ்பிரஸ் ரயில், 24 மற்றும் 25 ஆகிய தேதிகளில் முழுமையாக ரத்து செய்யப்படுகிறது.

10. ரயில் எண் 22650, ஈரோட்டிலிருந்து இரவு 9 மணிக்கு புறப்படும் ஈரோடு – டாக்டர் எம்ஜிஆர் சென்னை சென்ட்ரல் ஏற்காடு எக்ஸ்பிரஸ் 24 மற்றும் 25 ஆகிய தேதிகளில் முழுமையாக ரத்து செய்யப்படுகிறது.

11.ரயில் எண் 12695 , டாக்டர் எம்ஜிஆர் சென்னை சென்ட்ரல் ரயில் நிலையத்திலிருந்து மதியம் 3. 20 மணிக்கு புறப்படும் திருவனந்தபுரம் அதி விரைவு எல்ஸ்பிரஸ் 25 ஆம் தேதி முழுமையாக ரத்து செய்யப்படுகிறது.

12. ரயில் எண்: 12696, திருவனந்தபுரத்திலிருந்து மாலை 5.15 மணிக்கு புறப்படும் திருவனந்தபுரம் – டாக்டர் எம்ஜிஆர் சென்னை சென்ட்ரல் அதிவிரைவு ரயில் 25 ஆம் தேதி முழுமையாக ரத்து செய்யப்படுகிறது.

13. ரயில் எண் : 22637, டாக்டர் எம்ஜிஆர் சென்னை சென்ட்ரல் ரயில் நிலையத்திலிருந்து மதியம் 1.15 மணிக்கு புறப்படும் மங்களூர் மத்திய அதிவிரைவு வெஸ்ட் கோஸ்ட் எக்ஸ்பிரஸ் 25 மற்றும் 26 ஆம் தேதிகளில் முழுமையாக ரத்து செய்யப்படுகிறது.

14. ரயில் எண் 22638, மங்களூர் மத்திய ரயில் நிலையத்திலிருந்து இரவு 11. 45 மணிக்கு புறப்படும் டாக்டர் எம்ஜிஆர் சென்னை சென்ட்ரல் அதிவிரைவு வெஸ்ட் கோஸ்ட் எக்ஸ்பிரஸ் 25 மற்றும் 26 ஆம் தேதிகளில் முழுமையாக ரத்து செய்யப்படுகிறது.

ALSO READ  2022 ஜனவரி 5-ந் தேதி தமிழ்நாடு சட்டசபை கூடுகிறது

15. ரயில் எண்: 16085, அரக்கோணத்திலிருந்து மாலை 6.05 மணிக்கு புறப்படும் அரக்கோணம் – ஜோலார்பேட்டை எக்ஸ்பிரஸ் ரயில் 25 மற்றும் 26 ஆம் தேதிகளில் முழுமையாக ரத்து செய்யப்படுகிறது.

16 ரயில் எண்: 16086, ஜோலார்பேட்டையிலிருந்து காலை 6.55 மணிக்கு புறப்படும் ஜோலார்பேட்டை அரக்கோணம் எக்ஸ்பிரஸ் ரயில், 25 மற்றும் 26 ஆம் தேதிகளில் முழுமையாக ரத்து செய்யப்படுகிறது

17. ரயில் எண்: 16089 டாக்டர் எம்ஜிஆர் சென்னை சென்ட்ரல் ரயில் நிலையத்திலிருந்து மாலை 5.55 மணிக்கு புறப்படும் டாக்டர் எம்ஜிஆர் சென்னை சென்ட்ரல் – ஜோலார்பேட்டை ஏலகிரி எக்ஸ்பிரஸ் ரயில், 25 மற்றும் 26 ஆம் தேதிகளில் முழுமையாக ரத்து செய்யப்படுகிறது

18.ரயில் எண்: 16090, ஜோலார்பேட்டையிலிருந்து காலை 5 மணிக்கு புறப்படும் ஜோலார்பேட்டை – டாக்டர் எம்ஜிஆர் சென்னை சென்ட்ரல் ரயில், 25 மற்றும் 26 ஆம் தேதிகளில் முற்றிலுமாக ரத்து செய்யப்படுகிறது.

19. ரயில் எண்: 06033, சென்னை கடற்கரையிலிருந்து மாலை 6 மணிக்கு புறப்படும் வேலூர் எக்ஸ்பிரஸ் ரயில் 25 மற்றும் 26 ஆம் தேதிகளில் முழுமையாக ரத்து செய்யப்படுகிறது.

20.ரயில் எண்: 06034, வேலூரிலிருந்து காலை 6 மணிக்கு புறப்படும் வேலூர் – சென்னை கடற்கரை எக்ஸ்பிரஸ் ரயில் 25 மற்றும் 26 ஆம் தேதிகளில் ரத்து செய்யப்படுகிறது.

21.ரயில் எண்: 12671, டாக்டர் எம்ஜிஆர் சென்னை சென்ட்ரல் ரயில் நிலையத்திலிருந்து இரவு 9.05 மணிக்கு புறப்படும் மேட்டுபாளையம் நீலகிரி எக்ஸ்பிரஸ் 25 ஆம் தேதி முழுமையாக ரத்து செய்யப்படுகிறது.

22.ரயில் எண்: 12672, மேட்டுப்பாளையத்திலிருந்துஇரவு 9. 20 மணிக்கு புறப்படும் டாக்டர் எம்ஜிஆர் சென்னை சென்ட்ரல் நீலகிரி எக்ஸ்பிரஸ் 25 ஆம் தேதி முழுமையாக ரத்து செய்யப்படுகிறது.


Share
தமிழ்நாடு, இந்தியா, உலகம், சினிமா, விளையாட்டு, செய்திகளை உடனுக்குடன் தெரிந்துகொள்ள Tamil Thisai டெலிகிராம் சேனலுடன் எப்போதும் இணைந்திருங்கள்.

Related posts

காஞ்சிபுரம் அருகே அரங்கேறிய கொடூரம்:

naveen santhakumar

தமிழ்நாடு இசை மற்றும் கவின்கலை பல்கலைக்கழகத்தின் புதிய கட்டிடத்திற்கு அடிக்கல் நாட்டினார் முதல்வர் பழனிச்சாமி:

naveen santhakumar

ஜூன் 28 வரை புதிய தளர்வுகளுடன் ஊரடங்கு நீட்டிப்பு…!

naveen santhakumar