தமிழகம்

பெண் காவலர் பாலியல் புகார்; கூடுதல் எஸ்.பி பணியிடை நீக்கம்…!

தமிழ்நாடு, இந்தியா, உலகம், சினிமா, விளையாட்டு, செய்திகளை உடனுக்குடன் தெரிந்துகொள்ள Tamil Thisai டெலிகிராம் சேனலுடன் எப்போதும் இணைந்திருங்கள்.
Share

நீலகிரி:-

பெண் காவலர் அளித்த பாலியல் புகார் தொடர்பாக நீலகிரி மாவட்ட கூடுதல் காவல்துறை கண்காணிப்பாளர் பணியிடை நீக்கம் செய்யப்பட்டுள்ளார்.

பெண் காவலர் அளித்த பாலியல் புகார் தொடர்பாக நீலகிரி மாவட்ட கூடுதல் காவல் கண்காணிப்பாளர் பணியிடை நீக்கம் செய்யப்பட்டிருக்கும் நிலையில் அவரிடம் தொடர்ந்து அதிகாரிகள் விசாரணை நடத்த உள்ளனர்.

தீக்கதிர் - ஊடக உலகில் உண்மையின் பேரொளி

ஈரோடு மாவட்டத்தில் 2016ஆம் ஆண்டு பெண்கள் மற்றும் குழந்தைகளுக்கு எதிரான குற்றங்கள் தடுப்பு பிரிவில் துணை கண்காணிப்பாளராக பணியாற்றியவர் சார்லஸ்.

அப்போது பாலியல் அத்துமீறலில் ஈடுபட்டதாக அங்கு பணியாற்றிய பெண் காவலர் ஒருவர் சார்லஸ் மீது மாவட்ட கண்காணிப்பாளரிடம் புகார் அளித்திருந்தார்.

ALSO READ  தமிழகத்தில் ஜூலை 31 வரை ஊரடங்கு- முதல்வர் அறிவிப்பு…
பாலியல் தொல்லை

பாலியல் புகார் தொடர்பாக, அப்போதைய கோவை சரக டிஐஜி, ஐஜி உள்ளிட்டோர் விசாரித்தனர். புகார் காவல்துறை இயக்குநர் (டிஜிபி) கவனத்துக்கும் கொண்டு செல்லப்பட்டது.

இதுதொடர்பாக உயர் அதிகாரிகள் நடத்திய விசாரணையில் அவர் பாலியல் சீண்டலில் ஈடுபட்டது தெரியவந்தது. இதனையடுத்து நீலகிரி மாவட்ட கூடுதல் எஸ்.பி.யாக பணியாற்றிய சார்லஸ் பணியிடை நீக்கம் செய்யப்பட்டுள்ளார்.

ALSO READ  தொடர் தற்கொலைகள் - +2 மாணவி தற்கொலை; உருக்கமான கடிதம் சிக்கியது

இந்த பணியிடை நீக்க உத்தரவு, கோவை சரக டிஐஜி முத்துசாமி வாயிலாக, நீலகிரி மாவட்ட காவல் கண்காணிப்பாளர் மூலம் கூடுதல் எஸ்.பி. சார்லஸிடம் தெரிவிக்கப்பட்டது. தற்போது பணிபுரியும் இடத்திலேயே கூடுதல் எஸ்.பி. சார்லஸ் தங்கியிருக்க வேண்டும்.

அரசு அனுமதியில்லாமல், வேறு எங்கும் செல்லக்கூடாது எனவும் அந்த உத்தரவில் கூறப்பட்டுள்ளது. மேலும் அவரிடம் தொடர்ந்து விசாரணை நடத்த உயர் அதிகாரிகள் திட்டமிட்டுள்ளனர்.


Share
தமிழ்நாடு, இந்தியா, உலகம், சினிமா, விளையாட்டு, செய்திகளை உடனுக்குடன் தெரிந்துகொள்ள Tamil Thisai டெலிகிராம் சேனலுடன் எப்போதும் இணைந்திருங்கள்.

Related posts

ரேஷன் அரிசி புகார்…! இதோ வந்துட்டேன் என பைக்கில் சென்று “முதல்வன்” பட பாணியில் நடவடிக்கை செல்லூர் ராஜூ..

naveen santhakumar

போக்குவரத்து  தொழிலாளர்கள் கண்டனம் ஆர்ப்பாட்டம் !

News Editor

பள்ளிகளில் பாடத்திட்டங்கள் குறைப்பு – அமைச்சர் அன்பில் மகேஷ் :

Shobika