தமிழகம்

தடுப்பூசி போடாவிடில் ஊதியம் வழங்கப்படாது – மதுரை மண்டல தலைமைப் பொறியாளர் சுற்றறிக்கை

தமிழ்நாடு, இந்தியா, உலகம், சினிமா, விளையாட்டு, செய்திகளை உடனுக்குடன் தெரிந்துகொள்ள Tamil Thisai டெலிகிராம் சேனலுடன் எப்போதும் இணைந்திருங்கள்.
Share

தடுப்பூசி போடாத ஊழியர்கள் மற்றும் பணியாளர்களுக்கு டிசம்பர் மாத சம்பளம் வழங்கப்படாது என மதுரை மண்டலம் மின்வாரிய தலைமை பொறியாளர் சுற்றறிக்கை ஒன்றை அனுப்பியுள்ளார்.

அந்த சுற்றறிக்கையில் கூறியிருப்பதாவது,

மின்வாரிய ஊழியர்கள் தடுப்பூசி போடாவிடில் ஊதியம் வழங்கப்படாது" - மதுரை மண்டல  தலைமைப் பொறியாளர் சுற்றறிக்கை! | nakkheeran

மதுரை மண்டலத்திற்கு உட்பட்ட அனைத்து மின் பகிர்மான வட்டங்களில் பணிபுரியும் அனைத்து பணியாளர்கள் மற்றும் அலுவலர்கள் தடுப்பு மருந்து முதல் மற்றும் இரண்டாம் தவணை எதிர்வரும் டிசம்பர் 7ஆம் தேதிக்குள் செலுத்திக் கொள்ள அறிவுறுத்துமாறு கேட்டுக் கொள்ளப்படுகிறது.

ALSO READ  3 லட்சம் மாத்திரைகள், 2000 சானிடைசர், 10 ஆயிரம்மாஸ்க்; கொரோனாவிலிருந்து விடுபட சாய்பாபாவுக்கு அலங்காரம்!

அவ்வாறு தடுப்பு மருந்து செலுத்தி கொள்ளாத பணியாளர்கள் மற்றும் அலுவலர்களின் டிசம்பர் மாத ஊதியம் நிறுத்தம் செய்யப்படும் என கடந்த நவம்பர் 26-ஆம் தேதி நடைபெற்ற கலந்தாய்வு கூட்டத்தில் வாரிய தலைவர் அறிவுறுத்தல் செய்துள்ளார்.

ஆகவே தங்கள் வட்டத்தில் பணிபுரியும் அனைத்து பணியாளர்களும் தடுப்பு ஊசி மருந்து செலுத்தி கொண்டதற்கான விவர அறிக்கை தவறாமல் சமர்ப்பிக்குமாறு கேட்டுக் கொள்ளப்படுகிறது.

ALSO READ  ஊரடங்கு நீட்டிப்பு குறித்து முதல்வர் மு.க.ஸ்டாலின் இன்று ஆலோசனை.....

மருத்துவ காரணங்களுக்காக தடுப்பூசி செலுத்தாத அலுவலர்கள் மற்றும் பணியாளர்கள் உரிய மருத்துவச் சான்றிதழ் பெற்று சமர்ப்பிக்க அறிவுறுத்த அனைத்து மேற்பார்வை பொறியாளர்கள் கேட்டுக்கொள்ளப்படுகிறார்கள். இது குறித்த விரிவான அறிக்கையை டிசம்பர் 7ஆம் தேதி சமர்ப்பிக்க அறிவுறுத்தப்படுகிறது. இவ்வாறு அந்த அறிக்கையில் கூறப்பட்டுள்ளது என்பது குறிப்பிடத்தக்கது.


Share
தமிழ்நாடு, இந்தியா, உலகம், சினிமா, விளையாட்டு, செய்திகளை உடனுக்குடன் தெரிந்துகொள்ள Tamil Thisai டெலிகிராம் சேனலுடன் எப்போதும் இணைந்திருங்கள்.

Related posts

சென்னையில் 115-வது நாளாக நீடிக்கும் பெட்ரோல், டீசல் விலை!

Shanthi

பேரறிவாளன் விவகாரம் குறித்து தமிழக அரசுக்கு கேள்வி எழுப்பிய உச்ச நீதிமன்றம்!

Admin

10 மாவட்டங்களுக்கு கனமழை எச்சரிக்கை – வானிலை ஆய்வு மையம் தகவல்

naveen santhakumar