தமிழகம்

பச்சை நிறமாக மாறிய கடல் நீர் – பெரும் அபாயம்

தமிழ்நாடு, இந்தியா, உலகம், சினிமா, விளையாட்டு, செய்திகளை உடனுக்குடன் தெரிந்துகொள்ள Tamil Thisai டெலிகிராம் சேனலுடன் எப்போதும் இணைந்திருங்கள்.
Share

ராமேஸ்வரம் அருகே பாம்பன் கடல் பகுதியில் பூங்கோரை பாசியால் கடல் நீரின் நிறம் பச்சையாக மாறியது. இதனால் சிறிய ரக மீன்கள் உயிரிழக்கும் அபாயம் ஏற்பட்டுள்ளதாக நிபுணர்கள் எச்சரித்துள்ளனர்.

மன்னார் வளைகுடா கடல் பகுதியில் பாம்பன் முதல் வேதாளை வரை பச்சை நிறப் பூங்கோரைப் பாசிகள் நீரோட்டத்தில் அடித்து வரப்பட்டு கரை ஒதுங்கத் தொடங்கி உள்ளன. இதையடுத்து மத்திய கடல் மீன்வள ஆராய்ச்சி நிலைய ஆராய்ச்சியாளர்கள் கடல் நீரை ஆய்வு செய்து வருகின்றனர்.

திடீரென பச்சை நிறத்தில் மாறிய கடல்' மீன்கள் உயிரிழக்கும் அபாயம்;  அதிர்ச்சியில் ராமேஸ்வர மீனவர்கள்! - TopTamilNews

இதுகுறித்து மத்திய கடல் மீன்வள ஆராய்ச்சி நிலையத்தைச் சேர்ந்த ஆராய்ச்சியாளர்கள் கூறியதாவது,

ALSO READ  கடைகள்,நிறுவனங்களில் ஊழியர்களுக்கு இருக்கை வசதி அளிப்பது கட்டாயம்..!

மன்னார் வளைகுடா கடற்பகுதியில் செப்டம்பர் மற்றும் அக்டோபர் மாதங்களில் ‘நாட்டிலுக்கா சின்டிலெம்ஸ்’ கடற்பாசி அதிக அளவில் உற்பத்தியாகும். இதனை மீனவர்கள் ‘பூங்கோரை’ என்று அழைப்பார்கள். இந்த பாசிகள் கடலில் அதிக பரப்பளவில் படரும்போது கடல் நீர் பச்சை நிறத்தில் காட்சியளிக்கும்.

மண்டபம் கடல் பச்சை நிறமானது: மீன்கள் சாவதற்கு காரணம் என்ன ? ஆராய்ச்சி நிலைய  தலைமை விஞ்ஞானி விளக்கம்||The hall is sea-green: What causes the fish to  die? -DailyThanthi

கடந்த 2019-ம் ஆண்டு இந்த பாசிகள் படர்ந்தபோது, பாறைகளில் வசிக்கக் கூடிய மீன்களின் செதில்கள் அடைக்கப்பட்டு சுவாசிக்க முடியாமல் சிரமப்பட்டன. இதனால் ஆயிரக்கணக்கான மீன்கள் இறந்து கரை ஒதுங்கின. இந்த ஆண்டு தற்போதுவரை அதுபோன்ற சம்பவம் எதுவும் நிகழவில்லை.

ALSO READ  தமிழகத்தில் மாவட்ட வாரியாக கொரோனா பாதிப்பு விபரம்… 

அதேசமயம் இது விஷத்தன்மை உடைய பாசி கிடையாது. மேலும், இந்த பாசியால் பாதிக்கப்பட்டு மூச்சடைப்பால் இறந்த மீன்களை நன்றாக கழுவிவிட்டு சாப்பிடுவதால் மனிதர்களுக்கு எவ்விதமான தீங்கும் இல்லை.

இன்னும் ஒரு சில வாரங்களில் கடல் இயல்பு நிலைக்கு வந்துவிடும். எனவே மீனவர்கள் அச்சப்படத் தேவையில்லை என்று ஆராய்ச்சியாளர்கள் கூறியுள்ளனர்.


Share
தமிழ்நாடு, இந்தியா, உலகம், சினிமா, விளையாட்டு, செய்திகளை உடனுக்குடன் தெரிந்துகொள்ள Tamil Thisai டெலிகிராம் சேனலுடன் எப்போதும் இணைந்திருங்கள்.

Related posts

கிருஷ்ணகிரி மாவட்டத்தில் மக்களை தேடி மருத்துவம் திட்டம்- முதல்வர் ஸ்டாலின்- தொடங்கி வைத்தார்

News Editor

குடிமகன்களால் காற்றில் பறக்கும் சமூக இடைவெளி…

naveen santhakumar

இளைஞன் ஒருவனால் மூதாட்டிக்கு நேர்ந்த கொடூரம்…..

naveen santhakumar