தமிழகம்

பொறியியல் பட்டப் படிப்புகளுக்கான கலந்தாய்வு தொடங்கியது:

தமிழ்நாடு, இந்தியா, உலகம், சினிமா, விளையாட்டு, செய்திகளை உடனுக்குடன் தெரிந்துகொள்ள Tamil Thisai டெலிகிராம் சேனலுடன் எப்போதும் இணைந்திருங்கள்.
Share

சென்னை:

பொறியியல் படிப்புகளுக்கான மாணவர் சேர்க்கை ஆன்லைன் வழி கலந்தாய்வு  இன்று தொடங்கியது. முதல்கட்டமாக சிறப்பு பிரிவினருக்கு கவுன்சிலிங் நடக்கிறது.

தமிழகத்தில் 461 பொறியியல்  கல்லூரிகள் செயல்பட்டு வருகின்றனர். இந்த கல்லூரிகளில் 1 லட்சத்து 63 ஆயிரம் இடங்கள் உள்ள நிலையில், 1 லட்சத்து 60 ஆயிரம் பேர் கலந்தாய்விற்கு விண்ணப்பித்திருந்தனர். இதில், 1,12406 பேர் மட்டுமே பொறியியல் கலந்தாய்வில் பங்கேற்க தகுதிப்பெற்றனர். அவர்களுக்கான தரவரிசைப் பட்டியல் கடந்த மாதம்  28ம் தேதியன்று வெளியிடப்பட்டது. இந்நிலையில், பொறியியல் பட்டப் படிப்புகளுக்கு மாணவர் சேர்க்கைக்கான கலந்தாய்வு இன்று ஆன்லைனில் தொடங்கியது.

ALSO READ  பொறியியல் படிப்புக்கு தேர்வான மாணவர்களின் கல்வி கட்டணத்தை தமிழக அரசே ஏற்கும் - முதலவர் மு.க.ஸ்டாலின் அறிவிப்பு!!

முதல்கட்டமாக இன்று(அக்டோபர்-1) முதல் 5ம் தேதி வரை சிறப்புப் பிரிவு மாணவர்கள் பங்கேற்க உள்ளனர். விளையாட்டுப் பிரிவினர் 1409 பேருக்கும், முன்னாள் படை வீரர்களின் வாரிசுகள் 855 பேருக்கும், மாற்றுத்திறனாளிகளின் குழந்தைகள் 149 பேருக்கும் அழைப்பு விடுக்கப்பட்டுள்ளது.அக்டோபர் 8ம் தேதி முதல் 27ம் தேதி வரை பொதுப்பிரிவு மாணவர்களுக்கான கலந்தாய்விற்கும்,அக்டோபர் 8ம் தேதி முதல் 15ம் தேதி வரை தொழிற்கல்வி பிரிவு மாணவர்களுக்கான கலந்தாய்வும் நடைபெற உள்ளது.

இந்த கலந்தாய்வில் பங்கேற்க இருக்கும்  மாணவர்களுக்கு முன்கூட்டியே எந்த நேரத்தில் பங்கேற்க வேண்டும்??? என்று தமிழ்நாடு பொறியியல் சேர்க்கைக் குழு சார்பில் தகவல்கள் தெரிவிக்கப்பட்டுள்ளது. கணினி-இணைய வசதி இல்லாதவர்கள், மாவட்டம் தோறும் அமைக்கப்பட்டுள்ள உதவி மையங்கள் மூலம் ஆன்லைன் பொறியியல் கலந்தாய்வில் பங்கேற்கலாம்.மேலும் “www.tneaonline.org” என்ற இணையதளத்தின் மூலம் மாணவர்கள் தங்களுக்கு தேவைப்படும் தகவல்களை      அறிந்து கொள்ளலாம்.


Share
தமிழ்நாடு, இந்தியா, உலகம், சினிமா, விளையாட்டு, செய்திகளை உடனுக்குடன் தெரிந்துகொள்ள Tamil Thisai டெலிகிராம் சேனலுடன் எப்போதும் இணைந்திருங்கள்.

Related posts

தமிழகத்தில் கனமழைக்கு வாய்ப்பு :

Shobika

முன்னாள் நீதிபதி கர்ணன் கைது:

naveen santhakumar

தமிழகத்தில் இன்று போலியோ சொட்டு மருந்து முகாம்

Admin