தமிழகம்

திமுக ஆட்சி குறித்து ஆறு மாதத்திற்கு பின்பு தான் பேச முடியும் – அண்ணாமலை

தமிழ்நாடு, இந்தியா, உலகம், சினிமா, விளையாட்டு, செய்திகளை உடனுக்குடன் தெரிந்துகொள்ள Tamil Thisai டெலிகிராம் சேனலுடன் எப்போதும் இணைந்திருங்கள்.
Share

சென்னை:

75 வது சுதந்திர தினத்தை முன்னிட்டு பாரத ஜனதா கட்சி சார்பில் சுதந்திர தின லோகோவை பாரத ஜனதா கட்சியின் தமிழ்நாடு தலைவர் அண்ணாமலை இன்று வெளியிட்டார்.

அந்நிகழ்வின்போது பாரத ஜனதா கட்சியின் தமிழ்நாடு தலைவர் அண்ணாமலை திமுக ஆட்சியின் செயல்பாடுகள் குறித்து இப்போது கருத்து எதுவும் கூற முடியாது என்றும் இன்னும் ஆறு மாதத்திற்கு பின்னர் தான் முழுமையாக பேச முடியும் என்றும் பத்திரிகையாளர்களிடம் தெரிவித்தார்.

ALSO READ  ஜாவத் புயல் - துறைமுகங்களில் 1ஆம் எண் புயல் எச்சரிக்கை கூண்டு ஏற்றம்
BJP always stands for a unified Tamil Nadu' - The Hindu

மேலும் தமிழ்நாட்டில் ஐஏஎஸ், ஐபிஎஸ் அதிகாரிகள் நியமனம் பாராட்டுக்குரியதாக இருப்பதாக தமிழக பா.ஜ., தலைவர் அண்ணாமலை கூறியுள்ளார்.

தமிழக பா.ஜ., 75வது சுதந்திர தின விழாவை திருவிழாவாக கொண்டாட இருக்கிறது. சுதந்திரத்துக்காக போராடிய 75 தலைவர்கள் வசித்த இடங்களுக்கு 75 பா.ஜ., நிர்வாகிகள் நேரில் சென்று வீரவணக்கம் செலுத்த உள்ளனர்.

வரும் 16,17,18 ஆகிய மூன்று நாட்கள் மக்கள் ஆசி வேண்டி எனும் யாத்திரையை ஒன்றிய இணை அமைச்சர் எல்.முருகன் தலைமையில் கோவையில் துவக்கி வைக்க உள்ளார் என்றும் தெரிவித்தார்

ALSO READ  நீட் தேர்வு: மேலும் ஒரு மாணவி தோல்வி பயத்தில் தற்கொலை

திமுக வெளியிட்ட வெள்ளை அறிக்கை குறித்து உடனடியாக பதில் அளிக்க வேண்டிய அவசியமில்லை., பொது பட்ஜெட் மற்றும் வேளாண் பட்ஜெட் பார்த்துவிட்டு கருத்து தெரிவிக்கிறேன் என பாரத ஜனதா கட்சியின் தமிழ்நாடு தலைவர் அண்ணாமலை பத்திரிகையாளர்களிடம் தெரிவித்தார்.


Share
தமிழ்நாடு, இந்தியா, உலகம், சினிமா, விளையாட்டு, செய்திகளை உடனுக்குடன் தெரிந்துகொள்ள Tamil Thisai டெலிகிராம் சேனலுடன் எப்போதும் இணைந்திருங்கள்.

Related posts

அமெரிக்க செய்தியாளர்கள் புத்தகத்தில் அதிபர் டிரம்ப் குறித்துஅதிர வைக்கும் தகவல்கள்

Admin

5000- அனாதை பிணங்கள் இலவசமாக அடக்கம்.. மனிதநேயமிக்க தமிழக பெண்..

naveen santhakumar

மானாவாரி சாகுபடிக்காக  கட்டுப்பாடுகளை தளர்த்திய மாவட்ட ஆட்சியர் !

News Editor