தமிழகம்

மதுரை மக்களின் குடிநீர் தேவைக்காக வைகை ஆணை திறப்பு!

தமிழ்நாடு, இந்தியா, உலகம், சினிமா, விளையாட்டு, செய்திகளை உடனுக்குடன் தெரிந்துகொள்ள Tamil Thisai டெலிகிராம் சேனலுடன் எப்போதும் இணைந்திருங்கள்.
Share

மதுரை மக்களின் குடிநீர் தேவைக்காக வைகை அணையில் இருந்தது தண்ணீர் திறப்பு. இன்று முதல் 7 நாட்களுக்கு  திறக்க தமிழக அரசு உத்தரவு.

தேனி மாவட்டம், ஆண்டிப்பட்டி அருகே அமைந்துள்ள வைகை அணை. தேனி, மதுரை, திண்டுக்கல், சிவகங்கை, இராமநாதபுரம் ஆகிய 5 மாவட்ட மக்களின் நீராதாரமாக திகழ்கிறது. ஒவ்வொரு ஆண்டும் மதுரை சித்திரை திருவிழா, வைகை ஆற்றில் அழகர் எழுந்தருளும் நிகழ்ச்சிக்காக வைகை அணையில் இருந்து தண்ணீர் திறக்கப்படுவது வழக்கம். ஆனால் கடந்த ஆண்டும், இந்த ஆண்டும் கொரோனா தாக்கம் காரணமாக மதுரை சித்திரை திருவிழா ரத்து செய்யப்பட்டதால் தண்ணீர் திறக்கப்படவில்லை.

ALSO READ  தமிழகம் முழுவதும் பிப் 1 to 20 வரை… அமைச்சர் திடீர் அறிவிப்பு!


இந்நிலையில் 71 அடி உயரம் கொண்ட வைகை  அணையில் தற்போது 63 அடி வரையில் நீர் இருப்பு உள்ளதால், சித்திரை திருவிழாவிற்கு திறக்கப்பட வேண்டிய தண்ணீரை குடிநீர் தேவைக்காக ஆற்றில் திறக்க தமிழக அரசு உத்தரவிட்டது. இதனையடுத்து வைகை  அணையில் இருந்து வினாடிக்கு 1000 கனஅடி தண்ணீர் ஆற்றின் வழியாக இன்று திறக்கப்பட்டது. இந்த தண்ணீர் வருகிற 29 ம் தேதி வரையில் 7 நாட்கள் திறக்கப்பட உள்ளது. முதல் நாளான இன்று வினாடிக்கு 1000 கன அடி தண்ணீரும், நாளை முதல் 29ஆம் தேதி வரையில் வினாடிக்கு 300 கன அடி வீதம் தண்ணீர் திறக்கப்பட உள்ளது. மொத்தமுள்ள 7 நாட்களில் அணையில் இருந்து 216 மில்லியன் கனஅடி தண்ணீர் குடிநீர் தேவைக்காக திறக்கப்பட உள்ளது.

 
தற்போது திறக்கப்பட்டுள்ள இந்த தண்ணீரின் மூலம் வைகை ஆற்றில் குடிநீருக்காக அமைக்கப்பட்டுள்ள ஆயிரக்கணக்கான உறை கிணறுகளில் தண்ணீர் சுரக்கும் என பொதுப்பணித் துறையினர் தெரிவிக்கின்றனர்.


Share
தமிழ்நாடு, இந்தியா, உலகம், சினிமா, விளையாட்டு, செய்திகளை உடனுக்குடன் தெரிந்துகொள்ள Tamil Thisai டெலிகிராம் சேனலுடன் எப்போதும் இணைந்திருங்கள்.

Related posts

உள்ளாட்சி தேர்தல்; தேர்தல் அதிகாரிக்கு மிரட்டல் – 4 பேர் கைது

naveen santhakumar

தமிழக பள்ளி கல்லூரிகள் 11 மாதங்களுக்கு பிறகு திறப்பு!

News Editor

தமிழகம் முழுவதும் தீ தொண்டு திருவிழா !

News Editor