தமிழகம்

கிராண்ட் வெஸ்டர்ன் டிரங்க் ரோடு பெயர் அழிப்பு!

தமிழ்நாடு, இந்தியா, உலகம், சினிமா, விளையாட்டு, செய்திகளை உடனுக்குடன் தெரிந்துகொள்ள Tamil Thisai டெலிகிராம் சேனலுடன் எப்போதும் இணைந்திருங்கள்.

சென்னை சென்ட்ரல் ரயில் நிலையம், ஸ்டான்லி மருத்துவமனை,மற்றும் ரிப்பன் மாளிகை எதிரே மாநில நெடுஞ்சாலைத் துறையால் அமைக்கப்பட்டுள்ள பெயர் பலகையில் பெரியார் சாலை என்னும் பெயருக்கு பதிலாக கிராண்ட் வெஸ்டன் ட்ரங்க் ரோடு என பெயர் மாற்றம் செய்யப்பட்டுள்ளது. ஆனால் மாநகராட்சி ஆவணங்களிலும் மாநகராட்சி சார்பில் வைக்கப்பட்டுள்ள பெயர் பலகையில் பெரியார் சாலை என்று தான் தற்போது வரை குறிப்பிடப்பட்டுள்ளது.

ALSO READ  கடலூர் நாடாளுமன்ற உறுப்பினர் தனிமைப்படுத்தப்பட்டார்....

இந்த அராஜக பெயர் மாற்றத்திற்கு கீ.வீரமணி மற்றும் வைகோ போன்ற பல தலைவர்களும் பெரியார் மற்றும் சமூக நீதி இயக்கங்கள் போன்ற பல தரப்புக்களில் இருந்தும் கண்டனம் எழுந்த நிலையில், தந்தை பெரியார் திராவிட இயக்கம் வரும் 16ஆம் தேதி அந்தப் பெயர் பலகையை தார் கொண்டு அழிக்கும் போராட்டத்தை அறிவித்து இருந்தது.

இந்நிலையில் இன்று சில பெரியார் இயக்கத்தைச் சேர்ந்தவர்கள் அங்கு வந்து கருப்பு நிற பெயிண்ட் மூலம் பெயர் பலகையில் உள்ள வெஸ்டர்ன் கிராண்ட் டிரங்க் ரோடு என்னும் பெயரை அளித்துள்ளனர் என்பது குறிப்பிடத்தக்கது. மற்றும் மீண்டும் தந்தை பெரியார் சாலை என பெயர் மாற்றம் செய்யும் வரை போராட்டங்கள் தொடரும் எனவும் தந்தை பெரியார் திராவிடர் இயக்கம் சார்பாக அறிவிக்கப்பட்டுள்ளது.

ALSO READ  புதுவையில் அதிமுக ஆட்சி வரும்; அமைச்சர் ஜெயக்குமார் பேட்டி !

தமிழ்நாடு, இந்தியா, உலகம், சினிமா, விளையாட்டு, செய்திகளை உடனுக்குடன் தெரிந்துகொள்ள Tamil Thisai டெலிகிராம் சேனலுடன் எப்போதும் இணைந்திருங்கள்.

Related posts

கொரோனா வைரஸ் தொடர்பான தகவல்களை பெற தமிழக அரசின் புதிய இணையதளம்….

naveen santhakumar

அன்று ஜெயலலிதா…. இன்று குஷ்புவா????

naveen santhakumar

ஆற்றில் மூழ்கி மூவர் உயிரிழப்பு:

naveen santhakumar