தமிழகம்

மரணத்தின் விளிம்பில் சிறுவன்; அரசின் உதவியை எதிர்பார்த்து ஏழை குடும்பம்

தமிழ்நாடு, இந்தியா, உலகம், சினிமா, விளையாட்டு, செய்திகளை உடனுக்குடன் தெரிந்துகொள்ள Tamil Thisai டெலிகிராம் சேனலுடன் எப்போதும் இணைந்திருங்கள்.
Share

தேனி மாவட்டம் உத்தமபாளையம் தாலுகா, டி.சிந்தலைச்சேரி கிராமத்தை சேர்ந்தவர் குமார். கூலித்தொழிலாளி. இவரது மனைவி சியாமளா. தம்பதியின் மகன் ரபேலன் யாக்கோபு (2).

தேனி சிறுவன்

சிறுவன் ரபேலனுக்கு திடீரென உடல்நல குறைவு ஏற்பட்டுள்ளது. இதனையடுத்து சிறுவனை தேனி அரசு மருத்துவ கல்லூரி மருத்துவமனைக்கு கொண்டு சென்றபோது இதய துடிப்பில் வேகம் இருப்பதை மருத்துவர்கள் கண்டுபிடித்துள்ளனர்.

இதனால் உடனே சிறுவனை மேல்சிகிச்சைக்காக மதுரைக்கு கொண்டு செல்லுமாறு அறிவுறுத்தி உள்ளனர். பின்னர் அங்கும் கொண்டு சென்றுள்ளனர்.

அனல் மதுரையில் பரிசோதித்த மருத்துவர்கள் சிறுவனுக்கு இங்கு சிகிச்சை அளிக்க முடியாது என்று கூறி கோயம்புத்தூர் அல்லது திருவனந்தபுரம் கொண்டு செல்லுமாறு கூறியுள்ளனர்.

உடனடியாக கோவை ராமகிருஷ்ணா மருத்துவமனையில் அனுமதித்த போது தான் சிறுவனின் இதயம் தலைகீழாக உள்ளது என்றும் நுரையீரலுக்கு ரத்தம் செல்லும் பாதையில் கோளாறு என்றும் தெரியவந்துள்ளது.

ALSO READ  கே.பி. அன்பழகன் வீட்டில் திடீர் ரெய்டு… உண்மையை உடைத்த ஈபிஎஸ்!

ஆனால் சிகிச்சைக்கு ரூ.5 லட்சம் ஆகும் என்பதால், அவர்களும் வேறு மருத்துவமனையை பரிந்துரை செய்திருக்கின்றனர். அங்கும் இங்குமாய் அலைந்து பின்னர் முதலமைச்சரின் மருத்துவக் காப்பீட்டுத் திட்டத்தின் கீழ் சிகிச்சை பெற, கோயம்புத்தூர் குப்புசாமி நாயுடு மருத்துவமனைக்கு சென்றிருக்கின்றனர். ஆனால் காப்பீட்டுத் திட்டத்தின் கீழ் 1 லட்சம் ரூபாய் வரை மட்டுமே பெற முடியும் என மருத்துவ நிர்வாகம் கைவிரித்ததாக தெரிகிறது.

ALSO READ  ஜனவரியில் விடுதலையாகிறாரா சசிகலா?????

இதனால் செய்வதறியாது இடிந்துபோய் இருக்கும் குமார் – சியாமளா தம்பதி அரசின் உதவியை எதிர்ப்பார்த்து காத்திருக்கின்றனர்.

அந்த மாதிரி முதல்வர் அய்யா எங்க புள்ளைக்கும் மருத்துவ உதவி செய்தால் காலம் உள்ளவரை நன்றியுடன் இருப்போம் என்று சிறுவனின் தாய் கண்ணீரோடு தெரிவித்துள்ளார்.


Share
தமிழ்நாடு, இந்தியா, உலகம், சினிமா, விளையாட்டு, செய்திகளை உடனுக்குடன் தெரிந்துகொள்ள Tamil Thisai டெலிகிராம் சேனலுடன் எப்போதும் இணைந்திருங்கள்.

Related posts

கோயம்பேட்டில் பேருந்தில் திடீர் தீவிபத்து!

News Editor

மூன்று மாதங்களில் ரூ.4,000- தமிழக அரசு அறிவிப்பு!!

naveen santhakumar

தனது சேமிப்பு முழுவதையும் கொரோனா நிவாரண நிதிக்கு அளித்த தமிழக சிறுவன்….

naveen santhakumar