தமிழகம்

அஞ்சல்துறை வரலாற்றில் முதல் முறை- தமிழில் பாராட்டு சான்றிதழ் – எம்.பி சு.வெங்கடேசன் வரவேற்பு

தமிழ்நாடு, இந்தியா, உலகம், சினிமா, விளையாட்டு, செய்திகளை உடனுக்குடன் தெரிந்துகொள்ள Tamil Thisai டெலிகிராம் சேனலுடன் எப்போதும் இணைந்திருங்கள்.
Share

அஞ்சல்துறை வரலாற்றில் முதல் முறையாக பாராட்டு சான்றிதழ் தமிழ் முதன்மை மொழியாக அச்சிட்டு வழங்கப்பட்டுள்ளது. இது தமிழுக்கு வெற்றி என்று எம்.பி சு.வெங்கடேசன் வரவேற்பு தெரிவித்துள்ளார்.

அஞ்சல் துறையில் தமிழில் பாராட்டு சான்றிதழ்.வெங்கடேசன் எம்.பி வரவேற்பு

அஞ்சலகங்களில் பெரும்பாலும் படிவங்கள் இந்தியிலும், ஆங்கிலத்திலும் மட்டுமே இருந்தன. இதற்கு பல்வேறு தரப்பிலும் எதிர்ப்பு தெரிவிக்கப்பட்டது. தற்போது அஞ்சலகங்களில் தமிழில் படிவங்கள் வைக்கப்பட்டுள்ளன.

இந்நிலையில் தான், தமிழில் பாராட்டு சான்றிதழ்கள் வெளியிடப்பட்டு, வழங்கப்பட்டுள்ளன. இது தொடர்பாக எம்.பி சு.வெங்கடேசன் வெளியிட்டுள்ள அறிக்கையில்,

அஞ்சல் அலுவலக பணவிடைகள், சிறுசேமிப்பு படிவங்கள் இந்தியிலும், ஆங்கிலத்திலும் மட்டுமே இருந்தது. இதனை சுட்டிக்காட்டி இந்திய ஆட்சி மொழிச் சட்டங்களின்படி மாநில மொழிக்கான உரிமைகளை பறிப்பதையும், சட்டத்தை மீறி இந்தி திணிக்கப்படுவதை ஏற்க மாட்டோம் என்பதை அமைச்சகத்துக்கு உறுதிபடத் தெரிவித்தோம்.

அனைத்துப் படிவங்களும் தமிழில் வழங்க வேண்டும் என வலியுறுத்தினோம். அதனையடுத்து சென்னையில் தலைமை அஞ்சல் பொது மேலா ளரை சந்தித்தபோது அனைத்து படிவங்களும் தமிழில் இருக்கும் எனவும், ஆட்சிமொழி சட்ட விதிகள் முறையாக பின்பற்றப்படும் என உறுதியளித்தார்.

ALSO READ  ரமலான் மாத சிறப்பு தொழுகைக்காக இரண்டு மணிநேரம் அனுமதி அளிக்க வேண்டும் !
அஞ்சல் தமிழுக்கு கிடைத்த அடுத்த வெற்றி

அதன்படி தமிழகத்தில் உள்ள 14 ஆயிரம் அஞ்சலகங்களுக்கும் தமிழ் படிவங்கள் விரைந்து அனுப்பி வைக்கப்படும் என உறுதியளித்தார். தற்போது பல அஞ்சலகங்களுக்கும் தமிழில் படிவங்கள் அனுப்பிவைக்கப்பட்டுள்ளன.

இதுவரை ஊழியர்களுக்கு துறை ரீதியான பாராட்டு சான்றிதழ் இந்தி, ஆங்கிலத்தில் மட்டுமே வழங்கப்பட்டது. தற்போது அஞ்சல்துறை வரலாற்றில் முதல் முறையாக பாராட்டு சான்றிதழ் தமிழ் முதன்மை மொழியாக அச் சிட்டு வழங்கப்பட்டுள்ளது. இது தமிழுக்கு கிடைத்த அடுத் தகட்ட வெற்றி. இதனை வர வேற்கிறேன் என்று தெரிவித்துள்ளார்.


Share
தமிழ்நாடு, இந்தியா, உலகம், சினிமா, விளையாட்டு, செய்திகளை உடனுக்குடன் தெரிந்துகொள்ள Tamil Thisai டெலிகிராம் சேனலுடன் எப்போதும் இணைந்திருங்கள்.

Related posts

தமிழகத்தில் கோலாகலமாக கொண்டாடப்பட்ட செந்தில் தொண்டமானின் பிறந்தநாள்!!!

naveen santhakumar

ஜல்லிக்கட்டில் மீண்டும் டவுசரை கழட்டி ஓடவிட்ட அமைச்சர் செந்தில் தொண்டமானின் வீர மிகு காளை

News Editor

கல்லூரி மாணவியை கொலை செய்த காதலன் !

News Editor