தமிழகம்

ஆகஸ்ட் 31-க்கு முன் 40% கல்வி கட்டணம் மட்டுமே வசூலிக்க வேண்டும்- பள்ளிக்கல்வி ஆணையர்

தமிழ்நாடு, இந்தியா, உலகம், சினிமா, விளையாட்டு, செய்திகளை உடனுக்குடன் தெரிந்துகொள்ள Tamil Thisai டெலிகிராம் சேனலுடன் எப்போதும் இணைந்திருங்கள்.
Share

சென்னை:-

தமிழகத்தில் தனியார் பள்ளிகளில் ஆகஸ்ட் 31-க்கு முன் 40% கட்டணம் மட்டுமே வசூலிக்க வேண்டும் என பள்ளிக்கல்வி ஆணையர் உத்தரவிட்டுள்ளார்.

பணியில் சேர வரும் ஆசிரியர்களை தடுத்தால் காவல்துறை மூலம் நடவடிக்கை - பள்ளிக்  கல்வித்துறை || TN eduction department warns police intervene to prevent the  teachers from joining ...

கடந்த ஏப்ரல் 14ம் தேதி முதல் அரசு பள்ளிகள் திறக்கப்பட்டு, தலைமை ஆசிரியர்கள், அலுவலக பணியாளர்கள் வருகை புரிந்து, மாணவர் சேர்க்கை, மாற்றுச்சான்றிதழ் வழங்கும் பணியில் ஈடுபட்டு வருகின்றனர்.

கொரோனா பரவல் காரணமாக கடந்த 15 மாதங்களாக ஊரடங்கு அமல்படுத்தப்பட்டு வருகிறது. இதனால், பெரும்பாலான பொதுமக்களை வாழ்வாதாரம் பெரிதளவில் பாதிக்கப்பட்டு வருவாய் இல்லாமல் தவித்து வருகின்றனர்.

இதனால் தமிழகம் முழுவதும் அரசு பள்ளிகளில் மாணவர் சேர்க்கை கடந்த சில வாரங்களாக அதிகரித்து வருகிறது.

ALSO READ  நாகை எம்.பி. செல்வராஜுக்கு கொரோனா...
தனியார் பள்ளிகள் 40% கல்விக் கட்டணத்தை ஆக.,31க்குள் வசூலிக்கலாம்.. சென்னை  உயர்நீதிமன்றம் ஆணை..! - The Main News
courtesy

இதனிடையே, தனியார் பள்ளிகள் ஆன்லைன் மூலம் வகுப்புகள் நடத்துவதால், 70 சதவீத கல்வி கட்டணம் மட்டுமே வசூலிக்க வேண்டும் என அரசு அறிவுறுத்தியது. ஆனால், பல தனியார் பள்ளிகளில் முழு கட்டணத்தையும் செலுத்த வேண்டும் என கூறுவதாக குற்றச்சாட்டு எழுந்தது.

ALSO READ  செப்டம்பர் 1 ஆம் தேதி பள்ளிகள் திறப்பு தமிழ் நாடு அரசு முடிவு

இந்நிலையில், தனியார் பள்ளிகள் வற்புறுத்துவதாக புகார் எழுந்த நிலையில் தமிழகத்தில் தனியார் பள்ளிகளில் ஆகஸ்ட் 31-க்கு முன் 40% கட்டணம் மட்டுமே வசூலிக்க வேண்டும். 35% கட்டணத்தை பள்ளிகள் திறந்த 2 மாதத்திற்குள் வசூல் செய்து கொள்ளலாம் என பள்ளிக்கல்வித்துறை ஆணையர் உத்தரவிட்டுள்ளார்.

கடந்த ஆண்டு 2020 – 2021 ஆம் ஆண்டுக்கான கல்விக் கட்டணத்தில் இருந்து தனியார் பள்ளிகள் 40% கட்டணத்தை வசூலிக்கலாம் என்று சென்னை உயர்நீதிமன்றம் உத்தரவிட்டது குறிப்பிடத்தக்கது.


Share
தமிழ்நாடு, இந்தியா, உலகம், சினிமா, விளையாட்டு, செய்திகளை உடனுக்குடன் தெரிந்துகொள்ள Tamil Thisai டெலிகிராம் சேனலுடன் எப்போதும் இணைந்திருங்கள்.

Related posts

தேவர் ஜெயந்தி – தேவர் சிலைக்கு முதலமைச்சர் மாலை அணிவித்து மரியாதை – ஆப்சென்டான ஓபிஎஸ், இபிஎஸ்?

naveen santhakumar

ஆட்சியர் அலுவலகம் முன்பு கொட்டிக்கிடந்த மதுபாட்டில்கள்; போட்டிபோட்டு பொறுக்கிய மதுபிரியர்கள் !

News Editor

நாளை முழு ஊரடங்கு… ஆனால் வீடு தேடி சாப்பாடு வரும்!

naveen santhakumar