தமிழகம்

தமிழகத்தில் இன்று முழு ஊரடங்கு அமல்படுத்துவதில் சிக்கல் !

தமிழ்நாடு, இந்தியா, உலகம், சினிமா, விளையாட்டு, செய்திகளை உடனுக்குடன் தெரிந்துகொள்ள Tamil Thisai டெலிகிராம் சேனலுடன் எப்போதும் இணைந்திருங்கள்.
Share

தமிழக அரசு சார்பில் இன்று 24.5.2021 முதல் 01.06.2021 வரை ஒரு வார காலத்திற்கு தளர்வுகள் அற்ற கடுமையான ஊரடங்கு கடைபிடிக்கப்படும் என அறிவிக்கப்பட்டிருந்தது. அதன்படி இன்று தளர்வுகள் அற்ற கடுமையான ஊரடங்கு அமலுக்கு வந்தது.

அதன்படி  சென்னையில் சுழற்சி முறையில் 20 ஆயிரம் போலீசார் சென்னையில் கண்காணிப்பு பணியில் ஈடுபட்டுள்ளனர். மற்றும் சென்னையில் உள்ள 40 மேம்பாலங்களில் 35 மேம்பாலங்கள் போக்குவரத்திற்கு தடை செய்யப்பட்டுள்ளது.

அதனுடன் அத்தியாவசிய தேவையின்றி வெளியேற்றக்கூடிய வாகனங்கள் மற்றும் இருசக்கர வாகன ஓட்டிகளுக்கு ஒருமுறை எச்சரிக்கையும் இரண்டாம் முறை வெளியே சுற்றும் போது பிடிபட்ட வாகனம் பறிமுதல் செய்யப்பட்டு நீதிமன்றம் மூலம் ஊரடங்கு முடிந்த பின்னர் வழங்கப்பட நடவடிக்கை எடுக்கப்பட்டு வருகிறது .

ALSO READ  பிரபல தெலுங்கு இயக்குநருடன் இணையும் விஜய்; அதிகாரப்பூர்வ அறிவிப்பு வெளியீடு !

இந்நிலையில் கடந்த 10 தேதி முதல் 24ம் தேதி வரை அறிவிக்கப்பட்ட முதல் கட்ட ஊரடங்கின்  போது போது மக்கள் பலரும் இ-பதிவு மூலம் அனுமதி பெற்று பல்வேறு பகுதிக்கு பயணம் செய்து வந்தனர்.

அதன் இ-பதிவு விண்ணப்பம் ஆனது இன்று 24ஆம் தேதி வரை செல்லுபடி ஆகும் நிலையில் சென்னையில் வாகன சோதனையில் ஈடுபட்டுள்ள காவல்துறையினரிடம் சாலையில் செல்லும்  பொதுமக்கள் கடந்த ஊரடங்கின் போது பெறப்பட்ட இ-பதிவு விண்ணப்பங்களை காண்பித்து செல்வதால் காவல்துறையினர் தற்போது அமல்படுத்தப்பட்டுள்ள தளர்வுகளற்ற முழு ஊரடங்கை நடைமுறைப்படுத்துவதில் சிக்கலை சந்தித்து வருகின்றனர்.

ALSO READ  விபரீதத்தில் முடிந்த விளையாட்டு - கேக் ஊட்டி கொன்ற நண்பர்கள்

இதன் காரணமாக கொரோனா தொற்று எண்ணிக்கை அதிகரிப்பதை குறைக்க அரசு எடுத்த இந்த தளர்வுகளற்ற முழு ஊரடங்கை, இன்றைக்கு முழுமையாக அமல்படுத்த முடியாத சூழல் நிலவி வருகிறது.


Share
தமிழ்நாடு, இந்தியா, உலகம், சினிமா, விளையாட்டு, செய்திகளை உடனுக்குடன் தெரிந்துகொள்ள Tamil Thisai டெலிகிராம் சேனலுடன் எப்போதும் இணைந்திருங்கள்.

Related posts

மதுப்பிரியர்களுக்கு முக்கிய எச்சரிக்கை… தமிழக அரசு அதிரடி!

naveen santhakumar

வேதா நிலையத்தை அரசுடமையாக்கியது செல்லாது – உயர்நீதிமன்றம்

naveen santhakumar

இந்து சமய அறநிலையத்துறை புதிய கல்லூரிகள் தொடங்க சென்னை உயர்நீதிமன்றம் தடை

News Editor