தமிழகம்

முதல்வர் ஸ்டாலினின் முதல் கையெழுத்து; குடும்ப அட்டைக்கு 4 ஆயிரம் ! 

தமிழ்நாடு, இந்தியா, உலகம், சினிமா, விளையாட்டு, செய்திகளை உடனுக்குடன் தெரிந்துகொள்ள Tamil Thisai டெலிகிராம் சேனலுடன் எப்போதும் இணைந்திருங்கள்.
Share

தமிழகத்தில் நடந்து முடிந்த சட்டமன்ற தேர்தலில் திமுக 159 தொகுதிகளில் வெற்றி பெற்று அறுதிபெரும்பான்மையில் ஆட்சியை பிடித்துள்ளது. இதன் மூலம் தமிழகத்தின் அடுத்த முதல்வராக மு.க ஸ்டாலின் நாளை ஆளுநர் மாளிகையில் பதவியேற்கவுள்ளர்.

தமிழகத்தில் கொரோனாவால் பாதிக்கப்பட்டவர்களின்  எண்ணிக்கை தொடர்ந்து அதிகரித்து வரும்  நிலையில் இதனை தடுப்பதற்கு மாநிலம் முழுவதும் இரவு நேர ஊரடங்கு, ஞாயிற்றுக்கிழமை முழு ஊரடங்கு உள்ளிட்ட பல்வேறு கட்டுப்பாடுகளை தமிழக அரசு அமல்படுத்திருந்தது.இதனால் பலரும் தங்களின் வாழ்வாதாரங்களை இழந்து வருகின்றனர். 

இதனிடையே தேர்தலுக்கு முன்பு திமுக தலைவர் மு.க ஸ்டாலின் நாங்கள் ஆட்சிக்கு வந்தால் கொரோனா நிதியாக ஒரு குடும்ப அட்டைக்கு 4000 ரூபாய் நிவாரணமாக கொடுப்போம் என வாக்குறுதி அளித்திருந்தார். 

ALSO READ  மெட்ரோ ரயிலில் பெண்களுக்கு பிரத்யேகமான ஏற்பாடு :

இந்நிலையில் திமுக தலைவர் நாளை பொறுப்பேற்க உள்ளார். அதனையடுத்து அவர் போடும் முதல் கையெழுத்து கொரோனா நிதி திட்டத்தில் கையெழுத்து போடுவார் என எதிர்பார்க்கப்படுகிறது. அதனையடுத்து மாநிலம் முழுவதும் இந்த திட்டம் உடனடியாக செயல்படுத்தப்படும் என தகவல் வெளியாகியுள்ளது. 


Share
தமிழ்நாடு, இந்தியா, உலகம், சினிமா, விளையாட்டு, செய்திகளை உடனுக்குடன் தெரிந்துகொள்ள Tamil Thisai டெலிகிராம் சேனலுடன் எப்போதும் இணைந்திருங்கள்.

Related posts

13 வகையான பொருட்கள் அடங்கிய நிவாரண தொகுப்பு வழங்கும் திட்டத்தை, முதலமைச்சர் மு.க.ஸ்டாலின் நாளை துவங்குகிறார்….

Shobika

பள்ளிகளுக்கு பூட்டு – மாணவர்களிடையே வேகமாக பரவும் கொரோனா பெற்றோர் அச்சம் ..!

News Editor

தந்தை மரணம் – ஹெலிகாப்டரில் பறந்து வந்த பாசமகன்

naveen santhakumar