தமிழகம்

நவம்பர் 5ம் தேதி முதல் பள்ளி வளாகங்களிலேயே மாணவர்களுக்கு தடுப்பூசிகள் வழங்க பொதுசுகாதாரத்துறை உத்தரவு

தமிழ்நாடு, இந்தியா, உலகம், சினிமா, விளையாட்டு, செய்திகளை உடனுக்குடன் தெரிந்துகொள்ள Tamil Thisai டெலிகிராம் சேனலுடன் எப்போதும் இணைந்திருங்கள்.
Share

சென்னை:

தமிழகத்தில் காசநோய், கல்லீரல் தொற்று மற்றும் புற்றுநோய், இளம் பிள்ளை வாதம், கக்குவான் இருமல், ரண ஜன்னி, தொண்டை அடைப்பான், இன்ப்ளூயன்ஸ் தொற்று, கல்லீரல் தொற்று, வயிற்றுப்போக்கு, எம்.ஆர். தட்டம்மை மற்றும் ரூபெல்லா நோய், ஜப்பானிய மூளைக்காய்ச்சல் ஆகிய தடுப்பூசிகள் மாநிலத்தில் உள்ள அரசு பொது மருத்துவமனைகளிலும், ஆரம்ப சுகாதார நிலையங்களிலும் தேசிய அட்டவணையில் வகைப்படுத்தப்பட்டுள்ள அனைத்து தடுப்பூசிகள் வழங்கப்பட்டு வருகின்றன.

COVID-19 posters elementary school

கொரோனா தொற்று காரணமாக தற்போது பள்ளிகளிலேயே மாணவர்களுக்கு வழக்கமான தடுப்பூசிகளை வழங்க பொது சுகாதாரத்துறை நடவடிக்கை எடுத்துள்ளது.

ALSO READ  9 முதல் 12-ம் வகுப்பு மாணவர்களுக்கு பள்ளிகள் விரைவில் திறக்க முடிவு: அமைச்சர் அன்பில் மகேஷ்

எனவே நவம்பர் 5ம் தேதி முதல் அனைத்து பள்ளிகளிலும் தடுப்பூசி முகாம்கள் நடைபெறும் என்று பொதுசுகாதாரத்துறை அறிவித்துள்ளது.

Covid 19 -

மேலும் 5 முதல் 6 வயது வரை உள்ள மாணவர்களுக்கு தொண்டை அடைப்பான், கக்குவான் இருமல், ரண ஜன்னி தடுப்பூசியையம் வழங்க வேண்டும் எனவும் பொதுசுகாதாரத்துறை உத்தரவிட்டுள்ளது.

ALSO READ  கொரானா தடுப்பூசி இரண்டு டோஸ் போட்டிருந்தாலும் ஏற்றுக் கொள்ள முடியாது - பிரிட்டன் அரசு அறிவிப்பு

தடுப்பூசிபோடுவதை டிசம்பர் மாதத்துக்குள் நிறைவு செய்வதோடு பள்ளியில் இடை நின்ற குழந்தைகளைக் கண்டறிந்து அவர்களுக்கும் தடுப்பூசி வழங்க வேண்டும்என பொதுசுகாதாரத்துறை உத்தரவிட்டுள்ளது குறிப்பிடத்தக்கது.


Share
தமிழ்நாடு, இந்தியா, உலகம், சினிமா, விளையாட்டு, செய்திகளை உடனுக்குடன் தெரிந்துகொள்ள Tamil Thisai டெலிகிராம் சேனலுடன் எப்போதும் இணைந்திருங்கள்.

Related posts

முன்னாள் அமைச்சரின் கோரிக்கையை நிறைவேற்றிய இந்நாள் அமைச்சர் !

News Editor

அரசு ஊழியர்களுக்கான முன் ஊதிய உயர்வு ரத்து- தமிழக அரசு…

naveen santhakumar

நான் அரசியலுக்கு கட்டாயம்  வருவேன் : நடிகர் பார்த்திபன் 

News Editor