தமிழகம்

பள்ளி மாணவர்களுக்கு விடுமுறை – 8-ம் தேதி முதல் பள்ளிகளை திறக்க முடிவு

தமிழ்நாடு, இந்தியா, உலகம், சினிமா, விளையாட்டு, செய்திகளை உடனுக்குடன் தெரிந்துகொள்ள Tamil Thisai டெலிகிராம் சேனலுடன் எப்போதும் இணைந்திருங்கள்.
Share

தமிழகத்தில் 1 முதல் 8-ம் வகுப்பு வரை உள்ள மாணவர்களுக்கு நாளை மறுநாள் நவம்பர் 1-ம் தேதி முதல் பள்ளிகள் திறக்கப்படுகிறது.

பள்ளி மாணவர்களுக்கு இரண்டு நாட்கள் விடுமுறை - newscrowns

நீண்ட நாட்களுக்கு பின்னர் பள்ளிகளுக்கு வரும் மாணவ-மாணவிகள் தொற்று பரவாமல் தடுக்க அனைத்து பாதுகாப்பு நடவடிக்கைகளை மேற்கொள்ள கல்வித்துறை உத்தரவிட்டுள்ளது. அரசின் வழிகாட்டு நெறிமுறைகளை பின்பற்றி பள்ளிகளை திறக்க அறிவுறுத்தப்பட்டுள்ளது.

இதனிடையே வடகிழக்கு பருவமழை தொடங்கி இருப்பதால் பல்வேறு மாவட்டங்களில் கனமழை பெய்து வருகிறது. இதனால் தற்போது நடந்து வரும் 9 முதல் 12-ம் வகுப்புகளுக்கு விடுமுறை அளிக்கப்பட்டு வருகிறது.

ALSO READ  கொரோனா ஊரடங்கில் ஏழை மக்களுக்கு உதவி: முடிதிருத்த தொழிலாளியின் மகள் ஐநா-வின் நல்லெண்ணத் தூதராக நியமனம்..!!

இந்நிலையில், பள்ளிகள் திறந்த 2 நாட்களில் தீபாவளி பண்டிகை வருவதால் பெரும்பாலான பெற்றோர்கள் பண்டிகை கழித்தே குழந்தைகளை பள்ளிக்கு அனுப்ப விருப்பம் தெரிவித்துள்ளனர்.

தீபாவளிக்கு சொந்த ஊர்களுக்கு செல்லக்கூடியவர்கள் பண்டிகை முடிந்த பின்னர் பள்ளிக்கு வர ஏதுவாக ஒரு சில தனியார் பள்ளிகளில் 8-ந் தேதி பள்ளிகள் திறக்கப்படும் என்று அறிவிக்கப்பட்டுள்ளது.

ALSO READ  கவர்னர் பயணத்தின் போது மக்கள் பாதிக்கப்பட கூடாது : கவர்னர் ஆர்.என்.ரவி

ஆனால் திட்டமிட்டபடி 1-ந் தேதி பள்ளிகள் திறக்கப்படும் என்று கல்வித்துறை அமைச்சர் அன்பில் மகேஷ் பொய்யாமொழி அறிவித்துள்ளார். தற்போது ஒரு சில மாவட்டங்களில் பெய்து வரும் கனமழையால் பள்ளிகளை திறப்பதில் சிரமம் ஏற்பட்டுள்ளது.

மேலும், மாணவர்கள் மட்டுமின்றி ஆசிரியர்களும் பள்ளிக்கு வருவதில் சிக்கல் இருப்பதால் மழை பாதிப்பு அதிகம் உள்ள மாவட்டங்களில் பள்ளிகளை வருகிற 8-ந் தேதி திறக்க முடிவு செய்யப்பட்டுள்ளது.


Share
தமிழ்நாடு, இந்தியா, உலகம், சினிமா, விளையாட்டு, செய்திகளை உடனுக்குடன் தெரிந்துகொள்ள Tamil Thisai டெலிகிராம் சேனலுடன் எப்போதும் இணைந்திருங்கள்.

Related posts

நடிகர் அஜித் வீட்டுக்கு வெடிகுண்டு மிரட்டல்…

naveen santhakumar

அதிர்ச்சி……அமைச்சர் துரைக்கண்ணுக்கு கண்ணீர் அஞ்சலி போஸ்டர்….

naveen santhakumar

9 மாவட்டங்களில் உள்ளாட்சி தேர்தல் நடத்த வேண்டும்- உச்சநீதிமன்றம் உத்தரவு…!

News Editor