தமிழகம்

குமரியில் சூறைக்காற்று; 6 மாவட்டங்களுக்கு கனமழை எச்சரிக்கை !

தமிழ்நாடு, இந்தியா, உலகம், சினிமா, விளையாட்டு, செய்திகளை உடனுக்குடன் தெரிந்துகொள்ள Tamil Thisai டெலிகிராம் சேனலுடன் எப்போதும் இணைந்திருங்கள்.
Share

வெப்பச்சலனம் காரணமாக அடுத்த 24 மணி நேரத்தில் 6 மாவட்டங்களில் மழைக்கு வாய்ப்பு உள்ளதாக சென்னை வானிலை ஆய்வு மையம் தகவல் அளித்துள்ள நிலையில் குமரி மாவட்டத்தை புரட்டி போடும் அளவிற்கு சூறை காற்று மற்றும் இடியுடன் கூடிய கனமழை பெய்து வருகிறது. தொடர் கனமழையால் சாலைகளில் மழை வெள்ளம் பெருக்கெடுத்து ஓடும் நிலையில் பல்வேறு பகுதிகளில் மின்சாரம் தடைபட்டது.

தமிழகத்தில் வெப்பச்சலனம் காரணமாக அடுத்த 24 மணி நேரத்தில் 6 மாவட்டங்களில் மழைக்கு வாய்ப்பு உள்ளதாக சென்னை வானிலை ஆய்வு மையம் அறிவித்து இருந்தது.

ALSO READ  மே 1,2 தேதிகளில் முழு பொது முடக்கம்; தமிழக தலைமை தேர்தல் அதிகாரி விளக்கம் !

இந்நிலையில் கன்னியாகுமரி மாவட்டத்தில் மாவட்டத்தை புரட்டி போடும் அளவிற்கு சூறை காற்று மற்றும் இடியுடன் கூடிய கனமழை பெய்து வருகிறது, நாகர்கோவில், சுசீந்திரம், தக்கலை, மார்த்தாண்டம் உட்பட மாவட்டம் முழுவதும் தொடர்ந்து இரண்டு மணி நேரத்திற்கு மேலாக பெய்த கனமழையால் சாலைகளில் மழை வெள்ளம் ஆற்று வெள்ளம் போல் ஓடியது.

இதே போன்று மாவட்டத்தின் மலையோர பகுதிகளிலும் கனமழை நீடித்ததால் ஆறுகளில் வெள்ளப்பெருக்கு ஏற்பட்டு உள்ளது, மேலும் மாவட்டத்தில் உள்ள முக்கிய அணைகளான பேச்சிப்பாறை, பெருஞ்சாணி, சிற்றாறு உள்ளிட்ட அணைகளுக்கு நீர்வரத்து அதிகரித்து உள்ளது.


Share
தமிழ்நாடு, இந்தியா, உலகம், சினிமா, விளையாட்டு, செய்திகளை உடனுக்குடன் தெரிந்துகொள்ள Tamil Thisai டெலிகிராம் சேனலுடன் எப்போதும் இணைந்திருங்கள்.

Related posts

ஸ்டெர்லைட் ஆலை திறப்பை  எதிர்த்து மக்கள் அதிகாரம் சார்பில் கண்டன ஆர்ப்பாட்டம் ! 

News Editor

தற்கொலை தீர்வல்ல -நடிகர் சூர்யா உருக்கமான வேண்டுகோள்

News Editor

ஜூலை முதல் வாரத்தில் 12ஆம் வகுப்பு பொதுத்தேர்வு முடிவுகள் வெளியீடு- செங்கோட்டையன்…

naveen santhakumar