தமிழகம்

ரமலான் மாத சிறப்பு தொழுகைக்காக இரண்டு மணிநேரம் அனுமதி அளிக்க வேண்டும் !

தமிழ்நாடு, இந்தியா, உலகம், சினிமா, விளையாட்டு, செய்திகளை உடனுக்குடன் தெரிந்துகொள்ள Tamil Thisai டெலிகிராம் சேனலுடன் எப்போதும் இணைந்திருங்கள்.
Share

இந்தியாவில் தொடக்கத்தில் அதிகமாக இருந்த கொரோனா தொற்று படிப்படியாக குறைய தொடங்கிய நிலையில் தற்போது மீண்டு அதிகரித்து வருகிறது. இந்தியாவில் நாளுக்கு நாள் கொரோனா தொற்றால் பாதிக்கப்பட்டவரின் எண்ணிக்கை அதிகரிக்க வருகிறது. பரவி வரும் தொற்றை கட்டுப்படுத்துவதற்காக நாட்டின் பல மாநிலங்களில் பல்வேறு கட்டுப்பாடுகள் விதிக்கப்பட்டுள்ளது.

அந்தவகையில் தமிழகத்தில் கொரோனா பரவலை தடுக்க புதிய கட்டுப்பாடுகள் இன்று முதல் அமலுக்கு வந்துள்ளது. இந்நிலையில் இந்தி யூனியன் முஸ்லிம் லீக்  சார்பில் இன்று தலைமை செயலகத்தில் வேண்டுகோள் விடுத்து  மனு அளிக்கப்பட்டுள்ளது.

மனுவில் கூறியிருப்பதாவது, “கொரோனா இரண்டாவது அலையின் கரமாக இரவு 8 மணி வரை மட்டுமே வழிப்பட்டு தலங்களுக்கு அனுமதி அளிக்கப்பட்டுள்ளது. ரமலான் மாதம் பிறக்க இருப்பதால் வழிபாட்டு கால அளவை 2 மணி நேரங்கள் அதிகரித்து 10 மணி வரை அனுமதி அளிக்க வேண்டும் என்றும் எப்போதும் ரமலான் நோன்பு திறப்பதற்கு மசூதிகளுக்கு பச்சை அரிசி வழங்குவது வழக்கம் ஆனால் இந்த முறை அது பற்றிய எந்த தகவல்களும் வரவில்லை எனவும் நோன்பு நாட்கள் ஆரம்பிப்பதற்கு முன்பாகவே தரமான பச்சை அரிசியை வழங்க வேண்டும்” எனக் குறிப்பிடப்பட்டுள்ளது. 

ALSO READ  சென்னையில் ஊரடங்கை மீறுபவர்களுக்கு 14 நாட்கள் குவாரண்டைன்- சென்னை மாநகராட்சி எச்சரிக்கை....


Share
தமிழ்நாடு, இந்தியா, உலகம், சினிமா, விளையாட்டு, செய்திகளை உடனுக்குடன் தெரிந்துகொள்ள Tamil Thisai டெலிகிராம் சேனலுடன் எப்போதும் இணைந்திருங்கள்.

Related posts

ஒரே நாளில் 12 காதல் ஜோடிகள் பாதுகாப்பு கேட்டு காவல் நிலையத்தில் தஞ்சம்

News Editor

கொரோனா வைரஸ் தொடர்பான தகவல்களை பெற தமிழக அரசின் புதிய இணையதளம்….

naveen santhakumar

திடீரென புழல் சிறைக்கு மாற்றப்பட்ட முன்னாள் அமைச்சர் மணிகண்டன் :

Shobika