தமிழகம்

அரசுப் பணிகளில் பெண்களுக்கு இட ஒதுக்கீடு…!

தமிழ்நாடு, இந்தியா, உலகம், சினிமா, விளையாட்டு, செய்திகளை உடனுக்குடன் தெரிந்துகொள்ள Tamil Thisai டெலிகிராம் சேனலுடன் எப்போதும் இணைந்திருங்கள்.
Share

அரசுப் பணிகளில் பெண்களுக்கான இடஒதுக்கீடு 40 சதவீதமாக அதிகரிக்கப்படும் என்று சட்டபேரவையில் அமைச்சர் பழனிவேல் தியாகராஜன் அறிவித்தார்.

தமிழ்நாடு சட்டப்பேரவை கூட்டத் தொடரின் கடைசி நாளான நேற்று மனிதவள மேலாண்மை துறை அமைச்சர் பழனிவேல் தியாகராஜன் பல்வேறு அறிவிப்புகளை வெளியிட்டார். அந்த அறிவிப்பில், அரசுப் பணிகளில் பெண்களுக்கான ஒதுக்கீடு 30%ல் இருந்து 40% ஆக உயர்த்தப்படும்.

கொரோனாவால் பெற்றோரை இழந்த இளைஞர்களுக்கு அரசு பணியிடங்களில் முன்னுரிமை அளிக்கப்படும். முதல் தலைமை பட்டதாரிகள் அரசு பள்ளிகளில் தமிழ் மொழியில் படித்தோருக்கு அரசுப்பணியின் முன்னுரிமை வழங்கப்படும்.

ALSO READ  ஜப்பானிய முதலீடுகளுக்கு உகந்த மாநிலம் தமிழ்நாடு!

போட்டித் தேர்வுகளில் தமிழ்மொழிப் பாடத்தைக் கட்டாயமாக்க வேண்டும் என்ற அறிவிப்பு ஒன்றாகும். தமிழக அரசு துறைகளில் உள்ள பணியிடங்கள் மற்றும் மாநில பொதுத்துறை நிறுவனங்களில் உள்ள பணிகள் அனைத்திலும், தமிழக இளைஞர்களை 100% நியமனம் செய்யும் பொருட்டு, தமிழ்நாடு அரசு பணியாளர் தேர்வாணையமால் நடத்தப்படும் அனைத்து போட்டித் தேர்வுகளிலும் தமிழ் பாடத்தாள் கட்டாயமாக்கப்படும் என்று அமைச்சர் அறிவித்தார்.


Share
தமிழ்நாடு, இந்தியா, உலகம், சினிமா, விளையாட்டு, செய்திகளை உடனுக்குடன் தெரிந்துகொள்ள Tamil Thisai டெலிகிராம் சேனலுடன் எப்போதும் இணைந்திருங்கள்.

Related posts

ரயிலுக்கு அடியில் சிக்கிய மூதாட்டி உயிருடன் மீட்பு.

naveen santhakumar

பென்னிகுவிக் கல்லறை சேதம் செய்யப்பட்டது குறித்து ஓபிஎஸ் கண்டனம்:

naveen santhakumar

சர்வதேச சந்தையில் இன்றைய கச்சா எண்ணெய் விலை நிலவரம் :

Shobika