தமிழகம்

நாளை முழு ஊரடங்கு… ஆனால் வீடு தேடி சாப்பாடு வரும்!

தமிழ்நாடு, இந்தியா, உலகம், சினிமா, விளையாட்டு, செய்திகளை உடனுக்குடன் தெரிந்துகொள்ள Tamil Thisai டெலிகிராம் சேனலுடன் எப்போதும் இணைந்திருங்கள்.
Share

தமிழகத்தில் கோரதாண்டவம் ஆடும் கொரோனா தொற்றைக் கட்டுப்படுத்தும் விதமாக ஞாயிற்றுக்கிழமையான நாளை முழு ஊரடங்கிற்கு உத்தரவிடப்பட்டுள்ளது. முழு ஊரடங்கின் போது திருமணம் போன்ற நிகழ்ச்சிகளில் பங்கேற்கவும், உணவகங்களில் பார்சல் சேவை மட்டும் காலை 7 மணி முதல் இரவு 10 மணி வரை அனுமதி. உணவு டெலிவரி செய்யும் மின் வணிக நிறுவனங்கள் மேற்சொன்ன நேரத்தில் மட்டும் செயல்படவும் அனுமதி அளிக்கப்பட்டுள்ளது.

ALSO READ  பாரதியார் நினைவு நாள் மகாகவி நாளாக அறிவிப்பு!

முதலில் ஆன்லைன் உணவு டெலிவரிக்கு மட்டுமே அனுமதி அளிக்கப்பட்டிருந்த நிலையில், தற்போது உணவகங்கள் நேரடியாக வாடிக்கையாளர்களுக்கு உணவு டெலிவரி செய்ய தமிழ்நாடு அரசு அனுமதி அளித்துள்ளது. முழு ஊரடங்கின்போது உணவகங்கள் மற்றும் சிற்றுண்டி விடுதிகள் வாடிக்கையாளர்கள் வீடுகளுக்கு சென்று டெலிவரி செய்ய தமிழ்நாடு அரசு அனுமதி கொடுத்துள்ளது. மின்னணு வர்த்தக விநியோகம் மட்டுமின்றி சொந்த விநியோக முறையில் உணவகங்கள் டெலிவரி செய்யலாம், வாடிக்கையாளர்கள் வீடுகளுக்கு உணவகம் மூலமாக நேரடியாக உணவு வழங்கப்படுவதற்கு காவல்துறை ஒத்துழைப்பு வழங்குவார் என்றும் அறிவிக்கப்பட்டுள்ளது.


Share
தமிழ்நாடு, இந்தியா, உலகம், சினிமா, விளையாட்டு, செய்திகளை உடனுக்குடன் தெரிந்துகொள்ள Tamil Thisai டெலிகிராம் சேனலுடன் எப்போதும் இணைந்திருங்கள்.

Related posts

முன்னாள் ஐஜி பொன்மாணிக்கவேல் மருத்துவமனையில் அனுமதி… 

naveen santhakumar

பதவி உயர்வு தேர்வுக்கான TNPSC தேர்வில் கோளாறு – டி.என்.பி.எஸ்.சி.விளக்கம்

naveen santhakumar

34 வகையான கடைகளுக்கு நாளை முதல் கட்டுப்பாடுகள் தளர்வு – தமிழக அரசு அறிவிப்பு..

naveen santhakumar