தமிழகம்

கொரோனா தொற்றால் பலியானவர்கள் குடும்பத்திற்கு இறப்பு சான்றிதழ் வழங்குவதில் விதிகள் பின்பற்றப்பட வேண்டும்..!!

தமிழ்நாடு, இந்தியா, உலகம், சினிமா, விளையாட்டு, செய்திகளை உடனுக்குடன் தெரிந்துகொள்ள Tamil Thisai டெலிகிராம் சேனலுடன் எப்போதும் இணைந்திருங்கள்.
Share

கொரோனா தொற்றால் உயிரிழப்பவர்களுக்கு இறப்பு சான்றிதழ் கொரோனா மரணம் என்று அளிக்கும்படி தமிழக அரசுக்கு உத்தரவிடவேண்டும் என்று கோரி சென்னையைச் சேர்ந்த பெண் வழக்கறிஞர் ஸ்ரீராஜலட்சுமி சென்னை உயர்நீதிமன்றத்தில் பொதுநல வழக்கொன்றை தாக்கல் செய்திருந்தார்.

இந்த வழக்கு தலைமை நீதிபதி சஞ்சீப் பானர்ஜி, நீதிபதி ஆதிகேசவலு ஆகியோர் அடங்கிய அமர்வில் மீண்டும் விசாரணைக்கு வந்தது. அப்போது, தமிழக அரசுத்தரப்பில் தாக்கல் செய்யப்பட்ட அறிக்கையில், உச்ச நீதிமன்ற உத்தரவின் அடிப்படையில் கொரோனாவால் உயிரிழந்தவர்களுக்கு இறப்பு சான்றிதழ் வழங்குவது தொடர்பாக ஒன்றிய அரசு விதிகள் வகுத்துள்ளது என்று தெரிவிக்கப்பட்டிருந்தது.

மற்றும், தமிழ்நாட்டில் கொரொனா தொற்றினால் உயிரிழப்பவர்களின் எண்ணிக்கை நாளுக்கு நாள் அதிகரித்து வருகிறது. கொரொனா உயிரிழப்பால் தாய் தந்தையரை இழந்து நிற்கும் குழந்தைகளுக்கு மத்திய மாநில அரசுகள் முறையே ரூ.10 லட்சம் மற்றும் ரூ.5 லட்சம் வழங்குவதாக அறிவித்துள்ளன. தமிழக அரசு கொரொனாவால் உயிரிழக்கும் முன்களப் பணியாளர்களுக்கு ரூ.5 லட்சம் வழங்குவதாக அறிவித்துள்ளது.


Share
ALSO READ  கோரதாண்டவம் ஆடும் கொரோனா… சென்னையில் மட்டும் இத்தனை தெருக்களில் தொற்றா?
தமிழ்நாடு, இந்தியா, உலகம், சினிமா, விளையாட்டு, செய்திகளை உடனுக்குடன் தெரிந்துகொள்ள Tamil Thisai டெலிகிராம் சேனலுடன் எப்போதும் இணைந்திருங்கள்.

Related posts

இனி ரேஷன் கடைகளில் இது கட்டாயம் – உணவுத்துறை அமைச்சர்

naveen santhakumar

துரைக்கண்ணு உடல்நிலை குறித்து மருத்துவமனை நிர்வாகம் அறிக்கை:

naveen santhakumar

பேராசிரியர் பால் சந்திரமோகன் மீதான பாலியல் புகார்; புகார் அளிக்க அஞ்சும் மாணவிகள் ..!

News Editor