தமிழகம்

‘உன்னால ஒன்னும் புடுங்கமுடியாது’ – ஜெயராஜ்-பென்னிக்ஸ் மரண வழக்கை விசாரிக்கும் நீதிபதியை ஒருமையில் பேசிய போலீஸ்… 

தமிழ்நாடு, இந்தியா, உலகம், சினிமா, விளையாட்டு, செய்திகளை உடனுக்குடன் தெரிந்துகொள்ள Tamil Thisai டெலிகிராம் சேனலுடன் எப்போதும் இணைந்திருங்கள்.
Share

சாத்தான்குளம்:-

சாத்தான்குளம் சிறை மரணம் சம்பவம் குறித்து விசாரித்து வரும் நீதிபதியை காவல்துறையினர் ஒருமையில் பேசியுள்ளது பெரும் பரபரப்பை ஏற்படுத்தியுள்ளது.

சாத்தான்குளம் ஜெயராஜ், அவரது மகன் பென்னிக்ஸ் மரணம் தொடர்பாக உயர்நீதிமன்ற மதுரை கிளை விசாரித்து வருகிறது. அதற்காக கோவில்பட்டி கீழமை நீதிமன்ற நீதிபதி, சாத்தான்குளம் காவல்நிலையத்துக்கு விசாரிக்க சென்றார்.

அப்போது தூத்துக்குடி மாவட்ட கூடுதல்  கண்காணிப்பாளர் டி.குமார், துணை கண்காணிப்பாளர் சி.பிரதாபன் முன்னிலையில் மற்ற காவலர்கள் அவரை பணி செய்ய தடுத்தாக அந்த நீதிபதி புகார் அளித்துள்ளார். மேலும் காவலர்கள் நீதிபதி கேட்ட ஆவணங்களை தர மறுத்ததாகவும், அவரை தொடர்ந்து செல்போனில் படம் எடுத்ததாகவும் கூறி உள்ளார்.

அதுமட்டுமல்லாமல் மகாராஜன் என்ற காவலர் (Constable) நீதிபதியிடம் ‘உன்னால ஒன்னும் புடுங்கமுடியாது’ என்ற தரக்குறைவான வார்த்தையை உபயோகித்து, ஒருமையில் பேசியதாகவும் அந்த புகாரில் தெரிவிக்கப்பட்டுள்ளது. இது சம்பவம் பெரும் பரபரப்பை ஏற்படுத்தி வருகிறது.

ALSO READ  காவல்துறையைப் பெருமைப்படுத்தி 5 படங்கள் எடுத்ததற்காக மிகவும் வேதனைப்படுகிறேன்: இயக்குநர் ஹரி… 

அந்த நீதிபதி அளித்த புகாரின்பேரின் பேரில் தற்போது நீதிமன்ற அவமதிப்பு வழக்கு பதியப்பட்டுள்ளது. தூத்துக்குடி மாவட்ட கூடுதல்  கண்காணிப்பாளர் டி.குமார் மற்றும் துணை கண்காணிப்பாளர் சி.பிரதாபன் மற்றும் காவலர் மகாராஜன் உள்ளிட்டோர் நாளை மதுரை உயர்நீதிமன்ற கிளையில் ஆஜர் ஆக வேண்டும் என உத்தரவிடப்பட்டுள்ளது.

ALSO READ  பொதுவாழ்க்கையில் நூறு வயது காணும் சங்கரய்யாவுக்கு முதல்வர் ஸ்டாலின் வாழ்த்து
காவலர் மகாராஜன்.

Share
தமிழ்நாடு, இந்தியா, உலகம், சினிமா, விளையாட்டு, செய்திகளை உடனுக்குடன் தெரிந்துகொள்ள Tamil Thisai டெலிகிராம் சேனலுடன் எப்போதும் இணைந்திருங்கள்.

Related posts

கொரோனா தடுப்பு சிறப்பு அதிகாரியாக ராதாகிருஷ்ணன் IAS நியமனம்…

naveen santhakumar

நீட் தேர்வு ரத்து: அமைச்சர் உறுதி..!

naveen santhakumar

கொரோனா குறித்து ஹிப்ஹாப் ஆதி வெளியிட்டுள்ள விழிப்புணர்வு வீடியோ…

naveen santhakumar