இந்தியா தமிழகம்

10,12 மாணவர்களுக்கு பள்ளிக்கல்வித்துறை முக்கிய அறிவிப்பு!

தமிழ்நாடு, இந்தியா, உலகம், சினிமா, விளையாட்டு, செய்திகளை உடனுக்குடன் தெரிந்துகொள்ள Tamil Thisai டெலிகிராம் சேனலுடன் எப்போதும் இணைந்திருங்கள்.
Share

கடந்த மாதம் தமிழகத்தில் இருக்கும் 10, 11, 12-ஆம் வகுப்பு மாணவர்களுக்கு பொதுத் தேர்வுகள் நடைபெற்று முடிந்த நிலையில் 10 மற்றும் 12ஆம் வகுப்பு தேர்வு முடிவுகள் கடந்த ஜூன் 20 தேதி வெளியாகியது.
முதலில் 12-ஆம் வகுப்பு தேர்வு முடிவுகள் வெளியிடப்பட்ட நிலையில் பின்னர் 10-ஆம் வகுப்பு தேர்வு முடிவு வெளியாகியது.

ALSO READ  மத்திய அரசு வேளாண் மசோதாக்களை திரும்ப பெறவேண்டும்; முதல்வர் ஸ்டாலின் வலியுறுத்தல் !

இதனையடுத்து இந்த தேர்வில் 12-ஆம் வகுப்பில் 93.76% மாணவர்கள் தேர்ச்சி பெற்றுள்ளதாகவும் 10-ஆம் வகுப்பில் 90.07% மாணவர்கள் தேர்ச்சி பெற்றுள்ளதாகவும் இதில் மாணவிகள் 94.38% என்றும் மாணவர்கள் 85.83% தேர்ச்சி பெற்றுள்ளதாகவும் பள்ளிக்கல்வித்துறை அமைச்சர் அன்பில் மகேஷ் பொய்யாமொழி தெரிவித்தார்.

இந்நிலையில் 10 மற்றும்12ஆம் வகுப்பு தேர்ச்சி பெற்ற மாணவர்கள் இன்று காலை 11 மணி முதல் தற்காலிக மதிப்பெண் சான்றிதழை தேர்வு எழுதிய பள்ளிகள் வாயிலாகவோ அல்லது www.deg.tn.nic.in இணையதளம் மூலமாகவோ பெற்றுக்கொள்ளலாம் என பள்ளிக்கல்வித்துறை அறிவித்துள்ளது.


Share
தமிழ்நாடு, இந்தியா, உலகம், சினிமா, விளையாட்டு, செய்திகளை உடனுக்குடன் தெரிந்துகொள்ள Tamil Thisai டெலிகிராம் சேனலுடன் எப்போதும் இணைந்திருங்கள்.

Related posts

குரங்குகளை பயமுறுத்த கரடியாக மாறிய மக்கள்

Admin

முதலமைச்சர் தலைமையில் இன்று அமைச்சரவை கூட்டம்

Admin

சுற்றுலா பயணிகளுக்கு தடை… வெளியானது பரபரப்பு அறிவிப்பு

naveen santhakumar