தமிழகம்

துவக்கப் பள்ளிகள் மற்றும் நடு நிலை பள்ளிகள் திறப்பது குறித்து செப்.,8க்கு பின்பு முடிவு பள்ளிகல்வித்துறை அமைச்சர் அன்பில் மகேஷ் பொய்யாமொழி

தமிழ்நாடு, இந்தியா, உலகம், சினிமா, விளையாட்டு, செய்திகளை உடனுக்குடன் தெரிந்துகொள்ள Tamil Thisai டெலிகிராம் சேனலுடன் எப்போதும் இணைந்திருங்கள்.
Share

திருச்சி:

திருச்சியில் தமிழ் நாடு அரசு சார்பில் நல்லாசிரியர் விருது அறிவிக்கப்பட்டது. திருச்சி மாவட்டத்தில் உள்ள 13 ஆசிரியர்களுக்கு இன்று பள்ளிகல்வித்துறை அமைச்சர் மகேஷ் பொய்யாமொழி விருது வழங்கினார்.

இந்நிகழ்ச்சியில் பத்திரிகையாளர்களை சந்த்தித்தார். அப்போது தமிழகத்தில் 1 முதல் 8 ம் வகுப்பு வரை பள்ளிகள் திறப்பது குறித்து செப்.,8 ம் தேதிக்கு பிறகு முடிவு எடுக்கப்படும்,” என, பள்ளிகல்வித்துறை அமைச்சர் அன்பில் மகேஷ் பொய்யாமொழி கூறினார்.

ALSO READ  மு.க.ஸ்டாலின் தலைமையிலான 34 அமைச்சர்கள் பட்டியல் வெளியீடு !
Schools to reopen soon in Tamil Nadu, Karnataka

தற்போது 9 முதல் 12ம் வகுப்பு வரை வகுப்புகள் நடந்து வருகிறது. மாணவர்களின் பாதுகாப்பு குறித்து கண்காணித்து வருகிறோம். மாணவர்கள், பெற்றோர்கள் அச்சம் கொள்ள தேவையில்லை. மாணவர்களை கட்டாயமாக பள்ளிக்கு அனுப்ப வேண்டும் என அரசு கூறவில்லை. எனினும், பெற்றோர்கள் அக்கறையுடன் மாணவர்களை அனுப்ப வேண்டும். மாணவர்களின் பாதுகாப்பை உறுதி செய்வது எங்களின் கடமை என்று தெரிவித்தார்.

கொரானா தொற்று கட்டுப்பாட்டில் இருக்கும் இந்த சூழலில் துவக்கப் பள்ளிகள் மற்றும் நடு நிலைப் பள்ளிகள் திறப்பது குறித்து தமிழ் நாடு முதல்வருடன் ஆலோசித்து முடிவு செய்து செப்.,8 ம் தேதிக்கு பிறகு அறிவிக்கபடும் என பள்ளிகல்வித்துறை அமைச்சர் மகேஷ் பொய்யாமொழி தெரிவித்தார்.


Share
தமிழ்நாடு, இந்தியா, உலகம், சினிமா, விளையாட்டு, செய்திகளை உடனுக்குடன் தெரிந்துகொள்ள Tamil Thisai டெலிகிராம் சேனலுடன் எப்போதும் இணைந்திருங்கள்.

Related posts

அதிமுக கொடியை சசிகலா பயன்படுத்துவதை யாராலும் தடுக்க முடியாது; தினகரன் திட்டவட்டம் !

News Editor

கோவில் நிலங்களுக்கு பட்டா கிடையாது – அமைச்சர் சேகர்பாபு …!

News Editor

இன்று முதல் பொங்கல் சிறப்பு பேருந்துகள் இயக்கம்!

naveen santhakumar