தமிழகம்

ஆசிரியர்களுக்கு செக் : செங்கோட்டையன்…

தமிழ்நாடு, இந்தியா, உலகம், சினிமா, விளையாட்டு, செய்திகளை உடனுக்குடன் தெரிந்துகொள்ள Tamil Thisai டெலிகிராம் சேனலுடன் எப்போதும் இணைந்திருங்கள்.
Share

வைரஸ் தொற்று காரணமாக, கடந்த 5 மாதங்களாக லாக்டவுன் அமலில் இருந்து வருகிறது. இதன்காரணமாக, பொதுமக்கள் வீடுகளுக்குள்ளயே முடங்கிக்கிடக்க வேண்டிய சூழல் உள்ளது.

இந்நிலையில், கடந்த 30-ஆம் தேதி அன்று பல்வேறு தளர்வுகளுடன் கூடிய ஊரடங்கை தமிழக அரசு அறிவித்தது.

இதற்கிடையே, இன்று சென்னை கோட்டூர்புரம் அண்ணா நூற்றாண்டு நூலகத்தில் மேற்கொள்ளப்பட்டுள்ள ஏற்பாடுகளை பள்ளி கல்வித்துறை அமைச்சர் செங்கோட்டையன் ஆய்வு செய்தார்.

ALSO READ  இனி துப்பட்டா இல்லாமல் கோவிலில் நுழைய முடியாது- எந்த கோவில் தெரியுமா?

இதனைத்தொடர்ந்து செய்தியாளர்களை சந்தித்த அவர், ‘டெட்’ தேர்வு எழுதி, தேர்ச்சி அடைந்து 7 ஆண்டு நிறைவு செய்தவர்களுக்கு மீண்டும் வாய்ப்பு வழங்கப்பட மாட்டாது என்றும், மீண்டும் தேர்வு எழுத வேண்டும் என்றும் தெரிவித்துள்ளார்.

அதாவது, ஆசிரியர்கள் ஒவ்வொரு 7 ஆண்டுகளுக்கு ஒரு முறை , ‘டெட்’ தேர்வு எழுத வேண்டும் என்று செங்கோட்டையன் கூறியுள்ளார்.


Share
தமிழ்நாடு, இந்தியா, உலகம், சினிமா, விளையாட்டு, செய்திகளை உடனுக்குடன் தெரிந்துகொள்ள Tamil Thisai டெலிகிராம் சேனலுடன் எப்போதும் இணைந்திருங்கள்.

Related posts

IRCTC இணையதளத்தில் ரயில் முன்பதிவு இறுதி நிலவரம் அறியலாம்: புதிய வசதி அறிமுகம்

Admin

ஆதரவற்ற பெண்களுக்கு விலையில்லா ஆடுகள்: தமிழக அரசு அரசாணை

naveen santhakumar

மெகா தடுப்பூசி முகாம் – தமிழகம் முழுவதும் தடுப்பூசி செலுத்தும் பணி தொடக்கம்

News Editor