தமிழகம்

நெல்லையில் கொரோனா தடுப்பூசிக்கு தட்டுப்பாடு !

தமிழ்நாடு, இந்தியா, உலகம், சினிமா, விளையாட்டு, செய்திகளை உடனுக்குடன் தெரிந்துகொள்ள Tamil Thisai டெலிகிராம் சேனலுடன் எப்போதும் இணைந்திருங்கள்.
Share

நெல்லை மாவட்டத்தில் கொரோனா தொற்று அதிகரித்து வரும் நிலையில் தடுப்பூசி போடுவதில் மக்கள் ஆர்வம் செலுத்தி வருகின்றனர் . ஆனால் மருந்து இருப்பு குறைவாக இருப்பதால் மையங்களில் மக்கள் கூட்டம் அதிகமாக காணப்படுகிறது. பல மையங்களில் முதல் டோஸ் போடப்படாமல் திருப்பி அனுப்பப்படுகின்றன.


நெல்லை மாவட்டத்தில் நாளுக்கு நாள் கொரோனா தொற்று அதிகரித்து வருகிறது. நாள் ஒன்றுக்கு 400 க்கு மேல் பாதிப்புக்கு உள்ளாகி வருகின்றனர் .மாவட்டத்தில் மொத்தம் இதுவரை பாதிக்கப்பட்டவர்களின் எண்ணிக்கை 2000 ஆயிரத்தை தாண்டியது. நோய் தொற்று அதிகரித்து வரும் நிலையில் கொரோனா தடுப்பூசி போடுவதில் மக்கள் ஆர்வம் செலுத்துகின்றனர்.மாவட்டத்தில் 86 மையங்களில் தடுப்பூசி போடப்பட்டு வருகிறது. 


இந்நிலையில் கடந்த ஒரு வாரமாக தமிழகத்தில் தடுப்பூசி மருந்து தட்டுப்பாடு ஏற்பட்டுள்ளது. நெல்லையிலும் இதே நிலைதான் நீடிக்கிறது. நெல்லை மாவட்டத்தில் இதுவரை 60 ஆயிரத்திற்கும் மேற்பட்டவர்கள் தடுப்பூசி போட்டுள்ளனர். மேலும் மக்கள் ஊசி போடுவதற்காக தடுப்பூசி மையங்களில் குவிந்து வரும் நிலையில் 8 ஆயிரம் டோஸ் மட்டுமே இருப்பு உள்ளது. இதனால் முதல் டோஸ் போட வருபவர்களுக்கு  தடுப்பூசி போடாமல் பெரும்பாலன மையங்களில் திருப்பி அனுப்பப்படுகின்றன . இரண்டாவது டோஸ் எடுப்பவர்களுக்கு முன்னுரிமை அளிக்கப்படுகிறது. அவர்களுக்கு ஊசி போடுவதற்கும்  மருந்து குறைவாகவே உள்ளது என்பது குறிப்பிடத்தக்கது.


Share
ALSO READ  நான் இறந்து விட்டேன்- நித்தி பகீர் ஸ்டேட்மண்ட்...
தமிழ்நாடு, இந்தியா, உலகம், சினிமா, விளையாட்டு, செய்திகளை உடனுக்குடன் தெரிந்துகொள்ள Tamil Thisai டெலிகிராம் சேனலுடன் எப்போதும் இணைந்திருங்கள்.

Related posts

போயி வேற வேலை இருந்தா பாருங்கடா… டென்ஷனான விஜய் சேதுபதி- காரணம் என்ன??

naveen santhakumar

எம்எல்ஏ கருணாஸ் மற்றும் அதிமுக எம்எல்ஏ பவுன்ராஜ் இருவருக்கும் கொரோனா…

naveen santhakumar

தமிழ்நாட்டிற்கு சிறந்த மாநிலத்திற்கான விருதினை வழங்கியது மத்திய அரசு !

News Editor