தமிழகம்

தமிழகத்தில் மேலும் சில தளர்வுகள் :

தமிழ்நாடு, இந்தியா, உலகம், சினிமா, விளையாட்டு, செய்திகளை உடனுக்குடன் தெரிந்துகொள்ள Tamil Thisai டெலிகிராம் சேனலுடன் எப்போதும் இணைந்திருங்கள்.
Share

சென்னை:

தமிழகத்தில் கொரோனா பாதிப்பை கட்டுப்படுத்த ஊரடங்கு உத்தரவு கடந்த மார்ச் மாதத்தில் தொடங்கி இன்று வரை அமலில் உள்ளது.எனினும்,தொற்று பாதிப்பு குறைய தொடங்கியதாலும், மக்களின் வாழ்வாதாரம் மற்றும் பொருளாதாரம் ஆகியற்றை கணக்கில் கொண்டும் கடந்த ஜூன் மாதத்தில் இருந்து  ஊரடங்கு படிப்படியாக தளர்த்தப்பட்டு வருகிறது.

இதுதொடர்பாக தமிழக அரசு வெளியிட்டுள்ள அறிக்கையில் கூறியிருப்பதாவது,தமிழகத்தில் கூடுதல் தளர்வுகளுடன் டிசம்பர் 31 வரை ஊரடங்கு நீட்டிக்கப்பட்டுள்ளது.அதனடிப்படையில்,

ALSO READ  தமிழக பா.ஜ .க தலைவர் அண்ணாமலையின் பரபரப்பு அறிக்கை...

@) தமிழகத்தில் உள்ள கல்லூரிகள், பல்கலைக்கழங்களில் இளநிலை இறுதியாண்டு வகுப்புகள் டிசம்பர்-7ந்தேதி முதல் தொடங்குகிறது. கலை, அறிவியல்,மருத்துவம், தொழில்நுட்பம், பொறியியல், மீன்வளம், வேளாண்மை உள்ளிட்ட படிப்புகளுக்கும் தொடங்குகிறது. மாணவர்களுக்கான விடுதிகளும் செயல்பட அனுமதி அளிக்கப்படுகிறது.

@) விளையாட்டு பயிற்சிக்காக மட்டும் நீச்சல் குளங்கள் செயல்பட அனுமதிக்கப்படுகிறது.

ALSO READ  பள்ளிகள் திறப்பு எப்போது..??? பள்ளிக்கல்வித்துறை அமைச்சர் அன்பில் மகேஷ் பொய்யாமொழி விளக்கம் :

@) டிசம்பர்-14ந்தேதி முதல் மெரினா உள்ளிட்ட கடற்கரைகளுக்கு பொதுமக்கள் செல்ல அனுமதி அளிக்கப்படும்.

@) டிசம்பர்-1ந்தேதி முதல் உள் அரங்கங்களில் சமுதாய, அரசியல், பொழுதுபோக்கு, மதம் சார்ந்த கூட்டங்களுக்கு அனுமதி அளிக்கப்படும். அதிகபட்சம் 200 பேர் பங்கேற்கும் வகையில் உள் அரங்கங்களில் மட்டும் கூட்டம் நடத்திக்கொள்ளலாம்.இவ்வாறு அந்த அறிக்கையில் கூறப்பட்டுள்ளது.


Share
தமிழ்நாடு, இந்தியா, உலகம், சினிமா, விளையாட்டு, செய்திகளை உடனுக்குடன் தெரிந்துகொள்ள Tamil Thisai டெலிகிராம் சேனலுடன் எப்போதும் இணைந்திருங்கள்.

Related posts

தனியார் மருத்துவமனைகளிலும் இலவசமாக தடுப்பூசி – அமைச்சர் மா.சுப்பிரமணியன்

naveen santhakumar

நினைவு நூலகமாக மாறும் கி.ராவின் இல்லம் !

News Editor

சென்னை விமான நிலையத்தில் ‌‌‌‌‌‌‌Rapid RT-PCR பரிசோதனை கட்டணம் குறைப்பு..!

Admin