தமிழகம்

ரேஷன் கார்டு புதிய வசதி – தமிழக அரசு அறிவிப்பு

தமிழ்நாடு, இந்தியா, உலகம், சினிமா, விளையாட்டு, செய்திகளை உடனுக்குடன் தெரிந்துகொள்ள Tamil Thisai டெலிகிராம் சேனலுடன் எப்போதும் இணைந்திருங்கள்.
Share

தமிழகத்தில் புதிதாக ரேஷன் கார்டு விண்ணப்பிக்கும் போது ரத்து செய்யப்படுவதை தடுக்கும் வகையில் முக்கிய வசதி ஒன்று அறிமுகம் செய்யப்பட்டுள்ளது.

Maalaimalar News: Tamil News new ration card 7 lakh people applied in TN

தமிழகத்தில் உள்ள 39 மாவட்டங்களில் 34,773 ரேஷன் கடைகள் செயல்பட்டு வருகின்றன. இதன் மூலம் 2.19 கோடி குடும்பங்கள் பயனடைகின்றன.

இதையொட்டி 6.86 கோடி ஆதார் பதிவுகள் பெறப்பட்டுள்ளன. 2.18 கோடி பேரின் கைபேசி எண்களும் பதிவு செய்யப்பட்டுள்ளன. புதிதாக ரேஷன் கார்டுகள் விண்ணப்பிக்க வசதியாக tnpds.gov.in என்ற இணையதளம் பயன்பாட்டில் இருக்கிறது.

விண்ணப்பித்த 15 நாளில் புதிய ரே‌ஷன் கார்டு வழங்கப்படும்- கவர்னர் || Tamil  News Governor Banwarilal Purohit says new ration card will be issued within  15 days of application

இதில் புதிய ரேஷன் கார்டு விண்ணப்பித்தின் நிலை, நகல் மின்னணு ரேஷன் கார்டு விண்ணப்பிக்க, ரேஷன் கார்டில் உறுப்பினரை சேர்க்க, முகவரி மாற்றம் செய்ய, குடும்பத் தலைவர் மாற்றம் செய்ய, குடும்ப உறுப்பினர் நீக்க, அட்டை தொடர்பான சேவை நிலை அறிய என பல்வேறு வசதிகள் செய்யப்பட்டுள்ளன.

புதிதாக ரேஷன் கார்டு விண்ணப்பிக்கும் போது ஆதார் எண்ணுடன் முகவரி சான்று உள்ளிட்ட ஆவணங்களின் நகலை பதிவேற்றம் செய்ய வேண்டும்.

ALSO READ  வன்னியர் இட ஒதுக்கீடு அரசாணை ரத்து - மதுரை உயர்நீதிமன்றம் தீர்ப்பு

இவற்றை இணையதளம் வாயிலாகவே அதிகாரிகள் சரிபார்த்து, வீடுகளுக்கு கள ஆய்வு ஊழியர்களை அனுப்பி கார்டு வழங்க பரிந்துரை செய்வர். பலரிடம் போதிய ஆவணங்கள் இல்லை எனக் கூறி விண்ணப்பங்கள் நிராகரிக்கப்படும் சூழல் நிலவுகிறது.

இதனால் விண்ணப்பதாரர்கள் பெரிதும் பாதிக்கப்படுகின்றனர். இதுகுறித்து உணவுத்துறை அதிகாரிகள் கூறுகையில், இனிமேல் போதிய ஆவணங்கள் இல்லை என்று கூறி விண்ணப்பத்தை ரத்து செய்ய முடியாது.

ALSO READ  அதிக விலைக்கு விற்றால் உரிமம் ரத்து- ஆணையர் எச்சரிக்கை…!

அதற்காக ’மறுபரிசீலனை விண்ணப்பம்’ என்ற புதிய வசதி சேர்க்கப்பட்டுள்ளது. எனவே தேவைப்படும் ஆவணங்கள் குறித்த விவரம் எஸ்.எம்.எஸ் மூலம் விண்ணப்பதாரர்களுக்கு தெரிவிக்கப்படும்.

பின்னர் மொபைல் எண்ணிற்கு அனுப்பப்பட்ட குறியீட்டு எண்ணை பயன்படுத்தி, மறு பரிசீலனை விண்ணப்ப பக்கத்தில் குறிப்பிட வேண்டும். அந்த பக்கம் திறந்ததும் மொபைல் எண்ணை பதிவு செய்து ஓடிபி எண்ணை பதிவிட வேண்டும்.

இதற்கடுத்து வரும் பக்கத்தில் தேவைப்படும் விவரங்கள் காட்டும். அதன் அடிப்படையில் ஆவணங்களை பதிவேற்றலாம். உரிய திருத்தங்கள் செய்து பதிவேற்றலாம். இதையடுத்து சம்பந்தப்பட்ட அதிகாரிகள் அடுத்தகட்ட செயல்பாடுகளுக்கு ஒப்புதல் அளிப்பர் என்று தெரிவித்தனர்.

இந்த புதிய வசதி பொதுமக்களுக்கு பெரிதும் பயனுள்ளதாக இருக்கும் என்று எதிர்பார்க்கப்படுகிறது.


Share
தமிழ்நாடு, இந்தியா, உலகம், சினிமா, விளையாட்டு, செய்திகளை உடனுக்குடன் தெரிந்துகொள்ள Tamil Thisai டெலிகிராம் சேனலுடன் எப்போதும் இணைந்திருங்கள்.

Related posts

தமிழகத்தில் அமலுக்கு வந்தது தளர்வுகளற்ற முழு  ஊரடங்கு !

News Editor

அம்மா உணவக பணியாளருக்கு கொரோனா….

naveen santhakumar

தமிழ்நாட்டில் பிச்சையெடுக்கும் வெளிநாட்டு தொழிலதிபர்…

Admin