தமிழகம்

தமிழகத்தில் பத்தாம் வகுப்பு பொது தேர்வு ஒத்திவைப்பு… முதல்வர் எடப்பாடி அறிவிப்பு….

தமிழ்நாடு, இந்தியா, உலகம், சினிமா, விளையாட்டு, செய்திகளை உடனுக்குடன் தெரிந்துகொள்ள Tamil Thisai டெலிகிராம் சேனலுடன் எப்போதும் இணைந்திருங்கள்.
Share

உலகின் பல நாடுகளில் கொரோனோ வைரஸ் வேகமாக பரவி வருகிறது. இந்தியாவிலும் வைரஸின் தாக்கம் நாளுக்கு நாள் அதிகரித்து வருகிறது.

இந்த நிலையில் கொரோனா வைரஸை கட்டுப்படுத்துவதற்காக மத்திய அரசு சார்பிலும் தமிழக அரசு சார்பிலும் பல்வேறு நடவடிக்கைகள் எடுக்கப்பட்டு வருகின்றன.

கொரோனா வைரஸை கட்டுப்படுத்துவதற்காக பள்ளி கல்லூரிகள் வரும் மார்ச் 31-ஆம் தேதி வரை மூடப்பட்டுள்ளன. அதேபோல ஷாப்பிங் மால்கள், சினிமா தியேட்டர்கள், உடற்பயிற்சி கூடங்கள் என மக்கள் அதிகம் கூடும் இடங்கள் மார்ச் 31ம் தேதி வரை மூடப்பட்டுள்ளன.

ALSO READ  கொரோனா வைரஸை பரப்பியதற்காக, சீனாவிடம் நஷ்ட ஈடு கோரும் ஜெர்மனி...

இந்த நிலையில் இன்னும் சில நாட்களில் பத்தாம் வகுப்பு பொதுத்தேர்வுகள் தமிழகத்தில் நடைபெற உள்ளது. கொரோனா வைரஸ் தாக்குதல் காரணமாக பத்தாம் வகுப்பு பொதுத்தேர்வுகள் ஒத்தி வைக்கப்பட வேண்டுமென பல்வேறு தரப்பில் இருந்து கோரிக்கை எழுந்தன.

ஏற்கனவே ஒன்று முதல் ஒன்பதாம் வகுப்பு வரை All Pass என்று அறிவிக்கப்பட்டிருக்கும் நிலையில் பத்தாம் வகுப்பு பொதுத்தேர்வுகள் ஒத்திவைக்கப்படுவதாக தமிழக முதலமைச்சர் எடப்பாடி பழனிச்சாமி தெரிவித்திருக்கிறார்.

ALSO READ  மீண்டும் அதிகரிக்கும் கொரோனா; தமிழகம் வரும் உயர்மட்ட குழு !

ஏப்ரல் 14ம் தேதிக்கு (தமிழ் புத்தாண்டு) பிறகு பத்தாம் வகுப்பு பொதுத் தேர்வுகள் நடத்தப்படும் என்றும் தமிழக மாணவர்களின் நலன் கருதி இந்த முடிவு எடுக்கப்பட்டிருப்பதாக தமிழக முதலமைச்சர் எடப்பாடி பழனிச்சாமி தெரிவித்திருக்கிறார்


Share
தமிழ்நாடு, இந்தியா, உலகம், சினிமா, விளையாட்டு, செய்திகளை உடனுக்குடன் தெரிந்துகொள்ள Tamil Thisai டெலிகிராம் சேனலுடன் எப்போதும் இணைந்திருங்கள்.

Related posts

முதல்வர் எடப்பாடி பழனிசாமிக்குக் கொரோனா வராது; வந்தாலும் உடனே போய்விடும்- செல்லூர் ராஜூ 

naveen santhakumar

முட்டிக்கொள்ளும் அனிதா சம்பத் கணவர்-டான்ஸ் மாஸ்டர் சதீஷ்:

naveen santhakumar

முழு ஊரடங்கு; விமான சேவைகள் ரத்து !

News Editor