தமிழகம்

9 மாவட்டங்களில் மது விற்பனைக்கு தடை – மாநில தேர்தல் ஆணையம் உத்தரவு

தமிழ்நாடு, இந்தியா, உலகம், சினிமா, விளையாட்டு, செய்திகளை உடனுக்குடன் தெரிந்துகொள்ள Tamil Thisai டெலிகிராம் சேனலுடன் எப்போதும் இணைந்திருங்கள்.
Share

சென்னை:-

தமிழகத்தில் நடைபெற உள்ள ஊரக உள்ளாட்சித் தேர்தலை முன்னிட்டு 9 மாவட்டங்களில், அக்டோபர் 4 முதல் 9ம் தேதி வரையிலும், ஓட்டு எண்ணிக்கை நடைபெறும் அக். 12ம் தேதியும் மதுவிற்பனைக்குத் தடை விதித்து மாநில தேர்தல் ஆணையம் உத்தரவிட்டுள்ளது.

தமிழகத்தில் 2 நாட்களில் மது விற்பனை எவ்வளவு தெரியுமா? டாஸ்மாக் நிர்வாகம்  அறிவிப்பு! | Do You Know How Much Liquors Sold In 2 Days In Tamil Nadu?  Tasmac Administration Announces ...

தமிழகத்தில் வரும் அக்டோபர் மாதம் 6 மற்றும் 9 ஆகிய தேதிகளில் நெல்லை, தென்காசி, விழுப்புரம், கள்ளக்குறிச்சி, ராணிப்பேட்டை, திருப்பத்தூர், வேலூர், காஞ்சிபுரம், செங்கல்பட்டு ஆகிய 9 மாவட்டங்களுக்கு ஊரக உள்ளாட்சி தேர்தல் நடைபெற உள்ளது.

ALSO READ  குடிமகன்களுக்கு மேலும் ஒரு குஷியான செய்தி..

ஏனைய 28 மாவட்டங்களுக்கு உள்பட்ட ஊரக உள்ளாட்சி அமைப்புகளில் காலியாக உள்ள பதவியிடங்களுக்கு தற்செயல் தேர்தல் அக். 9ம் தேதி ஒரே கட்டமாக நடைபெற உள்ளது.

இந்நிலையில் ஊரக உள்ளாட்சி தேர்தல் நடைபெறும் பகுதியில் மது பாட்டில் விற்க தடை விதித்து மாநில தேர்தல் ஆணையம் உத்தரவிட்டுள்ளது.

ஊரக உள்ளாட்சி தேர்தல் : 9 மாவட்டங்களில் மதுவிற்க தடை.. தேர்தல் ஆணையம்  உத்தரவு | No tasmac shops be opened in civic poll bound districts - Tamil  Oneindia

இது குறித்து மாநில தேர்தல் ஆணையம் வெளியிட்டுள்ள அறிக்கையில்,

ஊரக உள்ளாட்சி தேர்தல் நடைபெறும் பகுதிகளில் மது விற்பனைக்கு தடை - மாநில  தேர்தல் ஆணையம் உத்தரவு | Dinamalar

ஊரக உள்ளாட்சித் தேர்தலுக்கான முதற்கட்ட வாக்குபதிவு நடைபெறும் இடங்களில் 4-ம் தேதி முதல் 6-ம் தேதி நள்ளிரவு 12 மணி வரை மது விற்கத் தடை விதிக்கப்படும் என்று அறிவிக்கப்பட்டுள்ளது. மேலும் இரண்டாம் கட்ட வாக்குப்பதிவு நடைபெறும் இடங்களில், 7-ம் தேதி முதல் 9-ம் தேதி வரை மது பாட்டில்கள் விற்க தடை விதிக்கப்பட்டுள்ளது.

ALSO READ  2 லிட்டர் பெட்ரோல் இலவசம் வாங்க வேலைக்கு …!

அதனை தொடர்ந்து 12-ம் தேதி வாக்கு எண்ணிக்கை நடைபெறும் போதும், வாக்கு எண்ணிக்கை மையங்களில் இருந்து 5 கி.மீ.சுற்றளவில் மது விற்பனை தடை செய்யப்படும் என்று மாநில தேர்தல் ஆணையத்தின் அறிக்கையில் தெரிவிக்கப்பட்டுள்ளது.


Share
தமிழ்நாடு, இந்தியா, உலகம், சினிமா, விளையாட்டு, செய்திகளை உடனுக்குடன் தெரிந்துகொள்ள Tamil Thisai டெலிகிராம் சேனலுடன் எப்போதும் இணைந்திருங்கள்.

Related posts

முன்னாள் முதல்-அமைச்சர் மு.கருணாநிதிக்கு சென்னை மெரினா கடற்கரையில் நினைவிடம் : விரைவில் பணிகள் தொடங்க திட்டம்

News Editor

முதல்வன் பட பாணியில் உடனே கோரிக்கையை நிறைவேற்றிய முதல்வர் எடப்பாடி பழனிச்சாமி:

naveen santhakumar

இறுதிக்கட்ட வேளையில் சென்னையின் பறக்கும் பாலங்கள்!

News Editor