தமிழகம்

ராஜலட்சுமி தனது கருத்தை வாபஸ் பெறவில்லையென்றால் தற்கொலை செய்து கொள்வேன்…கிராமிய பாடகி அதிரடி…

தனியார் தொலைக்காட்சியில் பிரபல பாட்டு போட்டி நிகழ்ச்சியான சூப்பர் சிங்கர் சீசன் 6-ல் கிராமிய பாடல்களை பாடி பிரபலமானவர்கள் செந்தில் கணேஷ் – ராஜலட்சுமி தம்பதி. இதில் செந்தில்கணேஷ், அந்த சீசனில் டைட்டல் வின்னராகவும் தேர்ந்தெடுக்கப்பட்டார். இந்த தம்பதி ஏற்கனவே கோயில் கலை நிகழ்ச்சிகளில் கிராமிய பாடல்களை பாடி வந்தனர். 

முன்னதாக சூப்பர் சிங்கர் நிகழ்ச்சியில் ராஜலட்சுமி பாடிய ஒரு சில பாடல்கள் மக்கள் மத்தியில் பெறும் வரவேற்பை பெற்றது. மற்ற பங்கேற்பாளர்களை போல இல்லாமல், இந்த தம்பதி சொந்தமாக பாடல் வரிகளை எழுதி பாடி வந்ததால் இவர்கள் தனித்துவமான போட்டியாளர்களாக பார்க்கப்பட்டனர்.

குறிப்பாக ராஜலட்சுமி பாடிய ‘கோவக்கார மச்சானுமில்ல’, ‘ செவத்த மச்சான்’ ஆகிய பாடல்கள் எவர் கிரீன் பாடல்களாக உள்ளன. இந்நிலையில், கிராமிய பாடகி மதுரமல்லி என்பவர் எழுதி பாடிய ‘ மாமான்னு கூப்பிடத்தான்’ என்ற பாடல் பிரபலமாகி இதுவரை 25 மில்லியன் பார்வையாளர்களை கடந்துள்ளது. இதுவரை ராஜலட்சுமியின் பாடலை கேட்டு வந்தவர்களை திசைதிருப்பிய இப்பாடலுக்கு ராஜலட்சுமி சொந்தம் கொண்டாடி மேடையில் பேசியதால், பாடகி மதுரமல்லி குற்றம் சாட்டியுள்ளதுடன், தற்கொலை செய்ய முயற்சிப்பதாகவும் கூறி பரபரப்பை ஏற்படுத்தியுள்ளார்.

அண்மையில் ஒரு கிராம நிகழ்ச்சியில் கலந்துகொண்ட ராஜலட்சுமி, ‘மாமான்னு கூப்பிடத்தான்’ பாடலை எனது தங்கை கலைவாணி பாடியதாகவும், எங்கு சென்றாலும் கலைவாணி வரவில்லையா???? என்று மக்கள் கேட்பதாகவும் மேடையில் கூறினார். அதனை பார்த்து அதிர்ச்சியடைந்த பாடகி மதுரமல்லி வீடியோ ஒன்றை வெளியிட்டு நியாயம் கேட்டுள்ளார்.

அந்த வீடியோவில், ” மனசு வலிக்கிறது. நான் எழுதி, இசையமைத்து பாடிய பாடலை யாரோ ஒருவர் பாடியதாக ராஜலட்சுமி மேடையில் பேசியது அசிங்கமாக உள்ளது. நான் பார்த்து இந்த இடத்துக்கு வந்துள்ளார் ராஜலட்சுமி. அவரது கருத்தை வாபஸ் பெறாவிட்டால், நான் தற்கொலை செய்துகொள்வேன்” என்று அந்த வீடியோவில் கண்ணீருடன் பேசியது தற்போது வைரலாகி வருகிறது. இதனால் ராஜலட்சுமியின் ரசிகர்கள் அதிர்ச்சியில் உறைந்துள்ளனர்.

Related posts

இனி மெட்ரோவில் சைக்கிள்களையும் எடுத்து செல்லலாம்..!!!!

naveen santhakumar

ஜூன் 22 முதல் 26 வரை ரேஷன் கடைகள் செயல்படாது…

naveen santhakumar

15 ஆண்டுகளாகியும் ஆறாத சுனாமியின் நினைவுகள்

Admin