தமிழகம்

அரசு பேருந்தில் தமிழ்நாடு முதலமைச்சர் மு.க.ஸ்டாலின் ஆய்வு

தமிழ்நாடு, இந்தியா, உலகம், சினிமா, விளையாட்டு, செய்திகளை உடனுக்குடன் தெரிந்துகொள்ள Tamil Thisai டெலிகிராம் சேனலுடன் எப்போதும் இணைந்திருங்கள்.
Share

சென்னை:

சென்னை கண்ணகி நகர் பகுதியில் பேருந்தில் ஏறி, பயணிகளிடம் குறைகளை கேட்டறிந்து முதலமைச்சர் மு.க.ஸ்டாலின் ஆய்வு மேற்கொண்டார்.

M19B தியாகராய நகர் – கண்ணகி நகர் செல்லும் பேருந்தில் எறி, முதலமைச்சர் மு.க.ஸ்டாலின் திடீர் ஆய்வு மேற்கொண்டார்.

பேருந்தில் பயணித்த பயணிகளிடம் பேருந்துகள் சரியான நேரத்தில் வருகிறதா, போதுமான வசதி உள்ளதா கூடுதல் வசதிகள் தேவைப்படுகிறதா என முதலமைச்சர் கேட்டறிந்தார்.

மேலும், பெண் பயணிகளிடம் பேருந்தில் பெண்களுக்கு இலவச டிக்கெட் முறையாக வழங்கப்படுகிறதா எனவும் கேட்டறிந்தார்.

ALSO READ  23 மாதங்களுக்கு பிறகு தமிழ்நாடு- கேரளா போக்குவரத்து துவங்கியது

முன்னதாக சென்னை துரைப்பாக்கம் கண்ணகிநகரில் உள்ள தடுப்பூசி முகாமிற்கு முதல்-அமைச்சர் மு.க.ஸ்டாலின் நேரில் வருகை தந்து ஆய்வு செய்தார். பின்னர் சென்னை எழில் நகர் பகுதியில் அமைக்கப்பட்டிருந்த மெகா தடுப்பூசி முகாமில் ஆய்வு மேற்கொண்டார்.

ALSO READ  திரைப்படம் மற்றும் சின்னத்திரை தொடர்பான பணிகளுக்கு தமிழக அரசு அனுமதி.

தடுப்பூசி செலுத்தும் பணி குறித்து அங்கிருந்த அதிகாரிகளிடம் கேட்டறிந்தார். தொடர்ந்து மக்களிடம் குறைகளை கேட்டறிந்த அவர், அங்கு பணியாற்றி வந்த சுகாதாரத்துறை ஊழியர்களுடன் புகைப்படம் எடுத்துக் கொண்டார்


Share
தமிழ்நாடு, இந்தியா, உலகம், சினிமா, விளையாட்டு, செய்திகளை உடனுக்குடன் தெரிந்துகொள்ள Tamil Thisai டெலிகிராம் சேனலுடன் எப்போதும் இணைந்திருங்கள்.

Related posts

அதிமுக முன்னாள் எம்.பி.செங்குட்டுவன் மறைவு …!

naveen santhakumar

சோமலாபுரத்தில் மதிய உணவு சாப்பிட்ட குழந்தைகள் ஆம்பூர் மருத்துவமனையில் அனுமதி

naveen santhakumar

கிருஷ்ணகிரி தி.மு.க. எம்.எல்.ஏ. செங்குட்டுவனுக்கு கொரோனா…

naveen santhakumar