தமிழகம்

தமிழ்நாட்டு குடிமகன்களுக்கு நற்செய்தி….

தமிழ்நாடு, இந்தியா, உலகம், சினிமா, விளையாட்டு, செய்திகளை உடனுக்குடன் தெரிந்துகொள்ள Tamil Thisai டெலிகிராம் சேனலுடன் எப்போதும் இணைந்திருங்கள்.
Share


கொரோனா ஊரடங்கு காரணமாக தமிழகத்தில் கடந்த  ஒரு மாதத்திற்கும் மேலாக மூடப்பட்டு கிடக்கும் டாஸ்மாக் மதுபான கடைகள், வரும் 7- ம் தேதி முதல் திறக்கப்படுகிறது.

நமது அண்டை மாநிலங்களான கர்நாடகா, ஆந்திராவில் மதுக்கடைகள் திறக்கப்பட்டு உள்ளது. இதனால் தமிழக எல்லைப்புற மாவட்டங்களில் இருந்து அதிக அளவில் அங்கு மது பிரியர்கள் செல்வதை கட்டுப்படுத்துவது சிரமமாக உள்ளது. எனவே இவர்களின் சிரமத்தை போக்க வேண்டி இந்த நடவடிக்கை எடுக்கப்பட்டு உள்ளதாக தமிழக அரசு விளக்கம் அளித்துள்ளது.

அதேநேரம், கொரோனா நோய் கட்டுப்பாட்டு பகுதிகளில் உள்ள மதுக்கடைகள் நிச்சயம்  திறக்கப்படாது. மற்ற பகுதிகளில் காலை 10 மணி முதல் மாலை 5 மணி வரை மட்டுமே டாஸ்மாக் மதுக்கடைகள் திறந்திருக்கும். ஆனால், மதுபான கடைகளில் பார்கள் செயல்பட அனுமதி இல்லை. 

ALSO READ  அதிகரிக்கும் கொரோனா; 100 படுக்கைகள் கொண்ட மருத்துவமனை திறப்பு !

மக்கள் கூட்டமா சேருவதை தவிர்க்கும் பொருட்டு, ஒரே நேரத்தில் 5 பேருக்கு மேல் டாஸ்மாக் கடைகளில் அனுமதிக்க கூடாது என்று தமிழக அரசு உத்தரவிட்டு உள்ளது.

தவிர, 6 அடி தூரம் வரை ஒருவருக் கொருவர் தள்ளி நின்று, தனி நபர் இடைவெளியை கடைபிடிக்க வேண்டும் என்றும் தமிழக அரசு கட்டுப்பாடுகளை விதித்துள்ளது. 

ALSO READ  ஆகஸ்டு இறுதி வரை தமிழகத்தில் ஊரடங்கு நீட்டிப்பு??? 


Share
தமிழ்நாடு, இந்தியா, உலகம், சினிமா, விளையாட்டு, செய்திகளை உடனுக்குடன் தெரிந்துகொள்ள Tamil Thisai டெலிகிராம் சேனலுடன் எப்போதும் இணைந்திருங்கள்.

Related posts

அண்ணா பல்கலைக்கழக பொறியியல் பாடத்திட்டம் மாற்றி அமைக்கப்படும்- அமைச்சர் பொன்முடி

Shobika

சத்தியம் தொலைக்காட்சி ஊழியர்களுக்கு கொரோனா பாதிப்பு….

naveen santhakumar

கொரோனா பரிசோதனைக்கான கட்டணத்தை குறைத்த தமிழக அரசு ! 

News Editor