தமிழகம்

வேலூரில் நிலநடுக்கம்: ரிக்டர் அளவுகோலில் 3.6 ஆக பதிவு

தமிழ்நாடு, இந்தியா, உலகம், சினிமா, விளையாட்டு, செய்திகளை உடனுக்குடன் தெரிந்துகொள்ள Tamil Thisai டெலிகிராம் சேனலுடன் எப்போதும் இணைந்திருங்கள்.
Share

வேலூர் மாவட்டத்தில் இன்று மிதமான நிலநடுக்கம் ஏற்பட்டது. இது ரிக்டர் அளவுகோலில் 3.6 ஆக பதிவாகியுள்ளது.

வேலூர் மாவட்டத்தில் இருந்து 59 கிமீ தொலைவில் இந்த நிலநடுக்கம் ஏற்பட்டது. இன்று அதிகாலை 4.17 மணியளவில் ஏற்பட்ட இந்த நிலநடுக்கம் ரிக்டர் அளவுகோலில் 3.6 என்று பதிவானதாக தேசிய புவியியல் ஆய்வு மையம் தெரிவித்துள்ளது.

Moderate earthquake in Vellore 3 6 on the Richter scale || வேலூரில் மிதமான  நிலநடுக்கம்: ரிக்டர் அளவுகோலில் 3.6 ஆக பதிவு

இந்த நில அதிர்வு வரைபடங்கள் மூலம் பதிவு செய்யப்பட்டுள்ளநிலையில், பெரும்பாலான மக்களால் உணரப்படவில்லை. தற்போது இந்த நிலநடுக்கத்தால் எந்தவித பாதிப்புகளும் ஏற்படவில்லை என்று தகவல் வெளியாகி உள்ளது.

ALSO READ  கீழடி அகழாய்வில் சுடுமண்ணால் ஆன தொட்டி கண்டுபிடிப்பு!

இதனிடையே கடந்த வெள்ளியன்று மிசோரத்தின் தென்வாலில் 6.1 ரிக்டர் அளவில் நில நடுக்கம் ஏற்பட்டது. இதே நிலஅதிர்வு வடகிழக்கு மாநிலங்களிலும் பங்களாதேஷின் ஒரு சில நகரங்களிலும் உணரப்பட்டதாக தெரிகிறது.

இந்நிலையில், நில அதிர்வால் பாதிப்பு ஏதும் ஏற்பட்டதா என ஆய்வு செய்யப்பட்டு வருவதாக தமிழக பேரிடர் மேலாண்மை அமைப்பு தெரிவித்துள்ளது.


Share
தமிழ்நாடு, இந்தியா, உலகம், சினிமா, விளையாட்டு, செய்திகளை உடனுக்குடன் தெரிந்துகொள்ள Tamil Thisai டெலிகிராம் சேனலுடன் எப்போதும் இணைந்திருங்கள்.

Related posts

மக்களுக்கு விழிப்புணர்வை ஏற்படுத்தும் விதமாக அமைச்சர் விஜயபாஸ்கர் கொரோனா தடுப்பூசி போட்டுக்கொண்டார் :

naveen santhakumar

போக்குவரத்து  தொழிலாளர்கள் கண்டனம் ஆர்ப்பாட்டம் !

News Editor

காவலர் தூக்குப் போட்டு தற்கொலை – விசாரணையில் பகீர் தகவல் !

naveen santhakumar